இயற்கை எனும் இளைய கன்னி.. உலக காடுகள் தினம்

Mar 21, 2026,01:54 PM IST

- டி. ஜெனிட்டா ரீனா


மார்ச் 21.. உலக காடுகள் தினம்


இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசும் போது முதலில் நம் நினைவுக்கு வருபவர் சாண்டி பிரசாத் பட். இயற்கையை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல, மக்களும் பங்கேற்க  வேண்டும் என்பதை தனது வாழ்நாள் முழுவதும்  செயலால் நிரூபித்தார்.


மலைப்பகுதிகளில் காடுகள் அழிவதால் நிலச்சரிவு, நீர் வறட்சி, விவசாய பாதிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்ததை அவர் நேரில் கண்டார். 


உலகை கவர்ந்த சுற்றுச்சூழல் புரட்சி




1970 ஆம் ஆண்டு வட இந்தியாவில்  இமயமலைப் பகுதிகளில் மரங்களை வெட்டுவதற்கு பெரிய அளவில் அனுமதி வழங்கப்பட்டது.  இதற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவானது. அதுவே 'சிப்கோ' இயக்கம். சிப்கோ என்றால் "அணைத்துக் கொள்" என்பதாகும். கவுராதேவி போன்ற பெண்கள் மரங்களை அனணத்துக் காப்பாற்றிய சம்பவங்கள் உலக கவனத்தை ஈர்த்தன. சுற்றுச்சூழல்  ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணாவும் அவரது மனைவி மூலம் அறிந்து தன்னை சிப்கோ இயக்கத்தில் இணைத்துக் கொண்டு அளப்பரிய பணிகளை ஆற்றினார். இதில் பெண்களின் பங்கு  அளப்பரியது.


1964 ஆம் ஆண்டு சாண்டி பிரசாத் பட் கிராம சயராஜ்ஜிய சங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் நோக்கம் காடுகளை பாதுகாத்து பயன்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பேணி கிராம சுயநிறைவு வளர்ச்சி அடைவதாகும். சாண்டி பிரசாத் பட் செய்ந பணியை உலக நாடுகள் பாராட்டி ரமோன் மக்சேசே விருது, ரைட் லைவ்லிகுட் விருது, பத்ம பூஷன், காந்தி அமைதி பரிசு, சத்திய சாய் விருது போன்ற பல விருதுகளை வழங்கி கௌரவித்தன. 


மரங்கள் நமக்கு நிழல் தருகிறது. தூய்மையா னகாற்றை சுவாசிக்க உதவுகிறது. மழைப்பொழிவிற்கு முக்கிய காணமாக விளங்குகிறது. மண் அரிப்பை தடுக்கிறது. நமக்கு தேவையான பழங்கள்,, காய்கள், இலைகள், பட்டைகள்,  வேர்கள், பூக்கள், மரச்சாமான்கள் போன்ற எண்ணற்ற பொருட்கள் கிடைக்கின்றன.  இயற்கை அழகு கொடுக்கிறது. 

மன அமைதி, மகிழ்ச்சி யை கொடுக்கிறது. பறவைகளின் புகலிடமாக விளங்குகிறது. பூச்சிகள், ஊர்வனவற்றின் வாழ்விடமாக விளங்குகிறது. பறவகளின் இனிய குரலோசை நம் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. 



'

மரங்களை நட்டு வளர்ப்பதால்  நமக்கு மட்டுமின்றி நம் தலைமுறைக்கும், நம் நாட்டிற்கும், உலகிற்கும் புவி வெப்பமயமாதலை தடுத்து இயற்கையை பாதுகாத்து நம் தலைமுறைகளுக்கு மாசுபடாத சுற்றுச்சூழலை பரிசளிப்போம். இல்லையென்றால் இன்று குடிநீர் பாட்டிலை விலைக்கு வாங்குவது போல் விரைவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் ஒரு கொரோனா வந்து இயற்கை பாதுகாப்பை நினைவூட்ட நாம் வாய்ப்பு தராமல் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்: நாட்டு வளம் காப்போம்.

மரம் வளர்ப்போம்: மழை பெறுவோம்.


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரீல்ஸ் நமக்கு தேவையா?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்