ஆடிப்பெருக்கு.. நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர்த் தாயை போற்றி வணங்கி வழிபடுவோம்!

Aug 02, 2025,11:21 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


"நீரின்றி அமையாது உலகு" என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க நீரை போற்றி தண்ணீரை வழிபாடு செய்யும் நாளே ஆடிப்பெருக்கு நன்னாள் ஆகும்.


ஆடிப்பெருக்கு :ஆடி பதினெட்டு  விசுவாசு வருடம் 20 25 ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. பெருகிவரும் தண்ணீர் நிறைந்த ஆறுகளை வழிபடும் நாள் ஆடிப்பெருக்கு .பழங்காலம் தொட்டு இந்த நன்னாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர் .நல்ல மழை பொழிந்து ஆறு நதிகளில் புது வெள்ளம் பெருகி போடும்  காலத்தில் ஆறுகளை நதிகளை வழிபடுவது சிறப்பு.


ஆடிப்பெருக்கில்  காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப் பெருக்கை கண்டு களிப்பர்.




விவசாயம் செழிக்க ஆற்றங்கரையில் அவர்கள் தங்கள் விவசாயத்திற்கு தடங்கல் ஏதும் இல்லாமல் விளைச்சல் நன்றாக நடைபெற வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் வகையில் வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி ஆற்றில் விடுவர் .பல வகையான உணவுகளை சமைத்து ஆற்றங்கரையில் குடும்பத்துடன் நண்பர்களுடன் மகிழ்ச்சியோடு உணவை உண்டு மகிழ்வர்.


ஆடி 18க்கு பல சிறப்புகள் உண்டு . எண்களில் 18 மிகவும் விசேஷமானது. பாரதத்தின் அத்தியாயங்கள் 18, மகாபாரத யுத்தம் நடந்தது 18 நாட்கள் ,கீதையின் அத்தியாயங்கள் 18, புராணங்கள் 18 ,சபரிமலை சாஸ்தா எழுந்தருளி இருப்பது 18 படிகளை கடந்து தான், தமிழில் உள்ள இலக்கிய நூல்களின் எண்ணிக்கை 18 ,இத்தனை சிறப்புக்கள் 18க்கு இருக்கின்றது .ஆடி 18 என்பது பாரதப்போர் நிறைவடைந்து பாண்டவர்கள் வெற்றி பெற்றதாக   கூறப்படுகிறது .ஆடி 18க்கு இத்தனை சிறப்புக்கள் உள்ளது.


ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தவிர்ப்பார்கள் ,ஆனாலும் ஆடிப்பெருக்கு அன்று திருமண பேச்சு ,தொழில், வியாபாரம் செய்வது, புதிதாக துவங்குவது புதியதாக சொத்து வாங்குவது ,நகை வாங்குவது ,வீட்டிற்கு தேவையான சாமான்கள்- வாஷிங் மெஷின், கிரைண்டர் ,டிவி போன்றவற்றை வாங்குவது, அவரவர்களுக்கு ஏற்ற முறையில் வாங்குவது ஆடிப்பெருக்கென்று செய்தால் சிறப்பானது என்று நம்பப்படுகிறது.


ஆடி மாதத்தில் காரியங்கள் செய்வதில்லை என்றாலும் ஆடிப்பெருக்கில் தாலி சரடு புதிதாக மாற்றி அணிந்து கொள்வது சிறப்பு மற்றும் புதுமண தம்பதிகளுக்கு புதுப்பெண்ணிற்கு தாலிச்சரடு பெருக்கி புதியதாக மஞ்சள் கயிறு மாற்றுவது என்பது சிறப்பானது. பல குடும்பங்களில் ஆடி 18 நன்னாளில்  இவ்வாறு சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.


தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஆடி 18, ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்