கள்ளக்குறிச்சி: உங்கள் சிந்தனையைச் சற்று மாற்றுங்கள். ஒரே ஒருமுறை ஆட்சியை என்னிடம் கொடுத்துத்தான் பாருங்களேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கள்ளக்குறிச்சியில் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், உங்க சிந்தனைய கொஞ்சம் மாத்துங்களேன். ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன். நல்ல கல்வி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீரை இலவசமாக தருகிறேன். நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன். அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையை தருகிறேன்.

கடந்த பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் மக்கள் எதிர்பார்த்த அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை. வாக்காளர்களாகிய நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகச் சிந்திப்பதால்தான் அதே போன்ற ஆட்சிகள் அமைகின்றன. இந்த முறை உங்கள் சிந்தனையைச் சற்று மாற்றிச் சிந்தித்து பாருங்கள். ஆட்சி அதிகாரம் என்பது எங்களிடம் ஒருமுறை வந்து சேரட்டும். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு முடிவு செய்யுங்கள். ஒரே ஒருமுறை எங்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்துப் பாருங்களேன்.
கொள்கையை முன்னிறுத்தி நீண்ட காலமாக அரசியல் செய்து வருகிறது. யாரு கையில் ஆட்சி இருந்தால் நல்லது என்று யோசித்து பாருங்கள். இலவசம் கொடுத்து ஏமாற்றுபவர்களிடம் ஆட்சியை கொடுக்காமல், ஒரு முறை மாற்றி யோசித்து உங்கள் மகனிடம் ஆட்சியை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
வாடகை வீடு.. 4 செட் கதர் வேட்டி சட்டை.. வங்கி இருப்பு ரூ. 110.. இவர் போல் தலைவர் இனி உண்டா?
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா திமுக்கு தக்காளி.. சிறார் பாடல்!
Short Story: விடுமுறை ஏக்கம்!
பேருந்துப் பயணத்தில்.. எறும்புக் கூட்டம் போல் விரைந்தோடிய மக்கள்!
{{comments.comment}}