சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத்தின் தலைவருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,

தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக பலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}