சென்னை: நேற்று எம்பியாக பொறுப்பேற்றுக்கொண்ட கமலஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு 6 எம்பிக்களின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து நேற்று கமலஹாசன், கவிஞர் சல்மா உட்பட 6 பேர் புதிய எம்பிக்காளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனையடுத்து எம்பியாக இருந்து விடைபெற்ற வைகோவிற்கும், புதிய எம்பியாக பதவியேற்றுக்கொண்ட கமலஹாசனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. அவர் வெளியிட்ட பதவில்,
நாடாளுமன்றம் சார்ந்து
புதிதாகப்
பொறுப்பேற்றுக்கொண்ட
நண்பர்களையும்
குறிப்பாக இருவரையும்
பாராட்டுகிறேன்
ஒருவர்
நாடாளுமன்றத்தை
நிறைவுசெய்கிறவர்;
இன்னொருவர்
நாடாளுமன்றத்தில்
நுழைவு செய்கிறவர்
மனித உரிமைகளுக்கும்
தமிழ் தமிழர்
தமிழ்நாட்டு உரிமைகளுக்கும்
சங்கு முழங்கிய
கலிங்கப்பட்டிச் சிங்கம்
வைகோ நிறைவுபெறுகிறார்
அவருக்கு
நாடே ஊராக இருந்தது;
நாடாளுமன்றமே
வீடாக இருந்தது
அவர் நெகிழ்ச்சியோடு
விடைபெறுவதில்
நெஞ்சு குழைந்தது;
வாழ்த்துகிறேன்
நுழைவு செய்கிறவர்
நண்பர்
கலைஞானி கமல்ஹாசன்
“நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயைச் சுட்டு விட்டவன்”
40 ஆண்டுகளுக்கு முன்னால்
நான் எழுதிய வரிகளுக்கு
இன்று நியாயம் செய்திருக்கிறார்
அவரும்
அனைத்து உறுப்பினர்களும்
தமிழில் உறுதிமொழி பூண்டது
எங்கள் புத்துணர்ச்சிக்குப்
புதுரத்தம் பாய்ச்சியது
வாழ்க!
உங்கள்
நாடாளுமன்ற நாட்கள்
நாட்டுக்கு நன்மை எழுதட்டும் என்று தெரிவித்துள்ளார்.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}