சென்னை: மென்மையை தேடி பயணிக்கும் பெண்களின் மனதிற்கு பிடித்தவாறு டெடி பொம்மைகளை பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்தும் கரடி பொம்மைகள் தினம் இன்று.
காதலர் தின கொண்டாட்டத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதியான இன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. இது காதல் வாரக் கொண்டாட்டத்தில் நான்காவது நாளாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று டெடி தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில், காதலன் மட்டுமல்லாமல் அக்கா தம்பி, அண்ணன் தங்கை, கணவன் மனைவி என தனக்கு பிடித்தமான அன்பானவர்களுக்கு டெடி பியர்களை பரிசாக வழங்குகிறார்கள்.
குறிப்பாக காதலன் காதலிக்கு கொடுக்கக்கூடிய அன்பு, அரவணைப்பு, ஆறுதல், என்பதை குறிக்கும் விதமாக டெடி பொம்மைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் வசீகரிக்கும் அழகுடன் கூடிய டெடி பொம்மைகளின் பொசு பொசுப்பு தன்மை, மென்மையான மேனி, அதன் அரைவணைப்பு போன்ற காரணங்களால் காதலர்கள் காதலிக்கு பிடித்தமான டெடி பொம்மைகளை பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

டெடி பொம்மைகளை பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் டெடிபியர்களை கட்டிப்பிடித்து தூங்குவது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் தாயைப் போன்ற மெதுவான அரவணைப்பு டெடி பொம்மைகளிடம் கிடைக்கிறது. இதனால் தங்களின் அன்பானவர்கள் அருகில் இல்லை என்றால் கூட அந்த ஏக்கத்தை போக்கும் விதமாக டெடி பொம்மைகளின் தோற்றமும் அழகும் துணையாக இருக்கும். இது அன்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.இதனால் காதலனுக்கு நிகரான அரவணைப்பை பெண்கள் டெடி பொம்மைகளிடம் உணர்கின்றனர்.
அப்புறம் என்ன காதலர்களே.. உற்ற தோழனாக, சகோதரனாக, கணவனாக காதலனாக, அம்மாவாக, நினைக்கும் டெடி பொம்மைகளை காதலிகளுக்கு கிஃப்டாக கொடுத்து அவர்களை இம்பிரஸ் செய்யுங்க..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}