தென்றலே என்னைத் தொடு.....!

Apr 29, 2026,12:21 PM IST

- கவிஞர் மு.வரதகுமாரி


இயற்கையின் பசுமையில் 

இனிமையாய்ப் பிறந்து வருபவளே!!


பொதிகை மலையிலே புறப்பட்டு

தவழ்ந்து வருபவளே!!


மனித மனத்தை மட்டற்ற மகிழ்ச்சியாய் மாற்றுபவளே!!


புத்தம் புதிய பூவினத்தைப் பூக்கச் செய்பவளே!!


சூரியனின் கொடுமையிலும்

குளிர்ச்சியைத் தர நினைப்பவளே!!


மாலைப் பொழுதை மகிழ்விக்க நடனமாடி  வருபவளே!!




ஆழிக்கரையருகே அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டவளே!!


புழுக்கத்திலும் புன்னகை பூக்கும் புதுமை கொண்டவளே!!


வியர்வைக்கு மருந்தாய், வெயிலுக்கு விருந்தாய்த், திகழ்பவளே!!


இப்போது என் நிலை உனக்குத் தெரியாதா?


விரைந்து, விழைந்து தென்றலே என்னைத் தொடு!


(கவிஞர் மு. வரதகுமாரி,  திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்