சென்னை: விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று திருமண நாளில், தனது மனைவி ஷோபாவை கார் ஷோரூமிற்கு அழைத்துச் சென்று கேக் வெட்டி புதிய கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விறுவிறுப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். தற்போது பூத் கமிட்டி மாநாடு வெற்றி பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து சிறப்பான பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபுறமோ தமிழ் சினிமாவில் தான் கமிட்டமான இறுதி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது பணிகளை பிசியாக சிறப்புடனே செய்து வருகிறார். இதற்கிடையே தந்தை எஸ்.ஏ சந்திரசேகருடனும் ஏற்றப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் அவரை ஒதுக்கி விட்டார் என பல்வேறு வதந்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் நடத்தி வரும் கட்சி விழா அனைத்திலும் தம்பதி சமேதராக அம்மா அப்பா இருவரும் கலந்துகொண்டு மகனை ஆசீர்வதித்து வருகின்றனர்.
இப்படி இந்தப் பிரச்சினை ஒருபுறம் முடிய மறுபுறம் விஜயின் மனைவி சங்கீதா ஏன் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவே இல்லை. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களா என கேள்வி எழுந்து வருகிறது. உலகம் இப்படித்தான் ஏதாவது ஒரு கேள்வியை பிடித்து தொற்றிக் கொண்டே தான் இருக்கும். சரி அதெல்லாம் விடுங்க.
நடிகர் விஜய் அம்மா பிரியர்.அம்மா மீது அதீத அன்பும் பாசமும் கொண்டவர். அம்மாவுக்காக சாய்பாபா கோயிலில் கட்டிக் கொடுத்தவர். அதேபோல் அம்மாவும் விஜயின் மீதும் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளில் விஜய் குறித்த தகவலை ஷோபா சந்திரசேகர் தெரிவித்து வருவதும் உண்டு.
இந்த நிலையில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் தங்களது திருமணநாளை இன்று சிறப்பாக கொண்டாடினர். அப்போது எஸ் ஏ சந்திரசேகர் மனைவி ஷோபாவை கார் ஷோரூமிற்கு அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தார். முதலில் கேக் வெட்டி இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் சந்திரசேகர் புது காரை திறந்து மனைவியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மனைவி ஷோபா முகமலர்ச்சியுடன் கணவரின் பரிசை ஏற்றுக்கொண்டு இருவரும் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏனெனில் ஏற்கனவே நடிகர் விஜய் ஒரு கார் பிரியர். மார்க்கெட்டில் வரும் புதுவிதமான கார்களை சேர்த்து வைக்கும் பழக்கம் கொண்டவர். அந்த வரிசையில் தற்போது எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா திருமண நாளில் புதிய ரக காரை ஒன்று வாங்கி இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
{{comments.comment}}