- பா. பானுமதி
விஷாலும் அவன் அம்மாவும் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பினார்கள். நத்தத்தில் காலை 8. 45 மணிக்கு காரைக்குடி பஸ் வரும் அதில் ஏறி 15 நிமிடம் பயணம் செய்து பள்ளிக்கு செல்ல வேண்டும் . வந்து பயணிகளை இறக்கி விட்டு உடனே கிளம்பி விடும் அதனால் கூட்டம் வேகமாக முண்டி அடித்து ஏறும் .
விஷால் அம்மா ஒரு கையில் லஞ்ச் பேக் விஷாலையும் பிடித்துக் கொண்டு தோளில் ஹேண்ட்பேக் மாட்டிக் கொண்டு வேகமாக ஏறினார். அப்போது ஒருத்தன் விஷால் அம்மா பேக்கில் உள்ள பர்சை எடுத்து விட்டான் .
வேகமாக ஏறி டிக்கெட் வாங்கி நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்குச் சென்ற பின் தான் விவரம் தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அம்மா, மறுநாள் முதல் கவனமாக இருந்தார்.
அடுத்து ஒருநாள் அருகில் வந்த ஒருவரை பார்த்த விஷால் சிரித்து தன் அம்மாவின் கையில் இருந்து பேக் திறந்து அதிலிருந்து பர்சை எடுத்து அந்த நபரிடம் கொடுக்க அம்மாவிற்கு பிள்ளையின் செயல் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது.. அந்த நபர்தான் கடந்த முறை பர்ஸை அடித்தவர் என்று.

பின் நிறுத்தத்தில் இறங்கியபோது, அந்த நபரும் இறங்கி பர்சு அடித்த தன்னிடமே மறுபடியும் பர்சு எடுத்துக் கொடுத்த அந்த பிள்ளையைப் பற்றி தாய் இடம் விவரித்தார். தன் தவறுக்கு வருந்தி அந்த பர்சில் எவ்வளவு பணம் வைத்திருந்தீர்கள் நான் தந்து விடுகிறேன் என்று கூற...
அந்த நபரின் நிலை அறிந்த விஷாலின் அம்மா, உன் பெற்றோருக்கு உன் நிலை தெரிந்தால் என்ன ஆகும்... உன் எதிர்காலம்...? என்று மெல்ல பேசி தன் தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்று விவரம் கூறி உதவி கேட்டார். பின்
அவருக்கு உணவு வாங்கி தந்தார். தலைமை ஆசிரியர் மூலமாக ஒரு வேலையும் வாங்கி தந்தார்.
தன் வாழ்வில் ஏற்பட்ட பெரு மாற்றத்திற்கு காரணம் விஷாலின் பிள்ளை குணத்தை பாராட்டி சென்றார்
மாற்றம் விதைத்த மழலை.
(தொடரும்)
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}