நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)

Dec 11, 2025,11:13 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)


நம் கதைகளிலும் சினிமாக்களிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தை ஃபீலிங் (Feeling).. ஏதோ ஃபீலிங் என்றால்.. காதல் அல்லது ரொமான்ஸ் என்றாகி விட்டது.. அதைப் பற்றி இங்கு பேசவில்லை..


உணர்வுகள்.. உணரும் திறன் இதைப் பற்றி சிறிது எண்ணி பார்க்கலாம்.. இயற்கையை உணர்வதற்கு… வாழ்க்கையை உணர்வதற்கு நமக்கு   ஐந்து கருவிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.. பார்த்தல்,கேட்டல்,  நுகர்தல், தொடு உணர்ச்சி.. மற்றும் சுவை உணர்ச்சி.. இந்த எல்லாவற்றையும் நாம் முழுவதுமாக உணர்கிறோமா என்றால் கட்டாயமாக இல்லை என்பது தான் உண்மையான பதில்.. 


நாம் ஒரு அறைக்குள் நுழைகிறோம் என்றால் முதல் சில கணங்களுக்கு அந்த அறையின் மணம்.. கேட்கும் சத்தம்  எல்லாம் கவனிப்போம்.. பிறகு பல சிந்தனைகளுக்குள் சென்று விடுவோம்.. நம்முடைய விழிப்புணர்வு.. சிந்தனை இல்லாமல் இருக்கும்போது மட்டுமே கூராக இருக்கும்.. சிந்தனையிலேயே நகரும் பொழுது நாம் விழிப்பாக இல்லை..




 நாம் குளிக்கும் போது தண்ணீர் நமது உடல் பாகங்களில் தொட்டுச் செல்வதை.. உணர்ந்து ரசித்திருக்கிறோமா அல்லது ஏதாவது சிந்தனைகளுக்குள் ஆழ்ந்து விடுகிறோமா? இது குளித்தலுக்கு மட்டுமல்ல.. நமது எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.. சாப்பிடும் போது, தண்ணீர் அருந்தலின் பொழுது உணர்ந்து ரசித்து செய்கிறோமா? நாம் உணரும் தன்மையில் இருந்தோமானால் நமது விழிப்புணர்வு மற்றும் உயிர் திறன் (Liveliness) நன்றாக இருக்கும்.. அவ்வாறு இருக்க நாம் இந்த ஷணத்தில்  இருக்க வேண்டும்..(We need to be in the present moment) 


சிந்தனை என்பது நடந்தவற்றைப் பற்றியோ அல்லது நடக்க வேண்டியது பற்றியோ மட்டுமே இருக்க முடியும்.. (Thoughts are always about the past or future) .. அப்போது நாம் இந்த ஷணத்தில்  இருக்க வாய்ப்பு இல்லை.. வாழ்க்கை என்பது இந்த ஷணத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது..


ஒரு சின்ன கதையை பார்ப்போமா 


காஷ்முஷ் தனக்கு ஏதோ ஒரு மணக்குழப்பம் இருப்பதாக ஒரு டாக்டரை சென்று  பார்த்தார்.. டாக்டர் ஒரு மனநல மருத்துவர்.. காஷ்முஷிடம் கண் மூட சொல்லி..தனது கையை அவர் கைமீது வைத்து இப்போது என்ன உணருகிறீர்கள் என்று கேட்டார் காஷ்முஷ் சொன்னார் உங்கள் கையை உணருகிறேன்.. “ இல்லை நீங்கள் வெறும் வார்த்தைகளால் கூறுகிறீர்கள்…நான் கேட்டது “ என்ன உணர்கிறீர்கள்?”.. இப்பொழுது காஷ்முஷ் சொன்னார்… உங்களுடைய ஐந்து விரல்கள் என்னுடைய கையை தொடுவதை உணர்கிறேன்.. இப்பொழுது மருத்துவர் நீங்கள் சிந்தித்து பதில் கூறு கிறீர்கள்.. நான் கேட்டது நீங்கள் என்ன உணருகிறீர்கள்.. இப்பொழுது காஷ்மீர் உணர்ந்து பார்த்து பதில் சொன்னார் இப்பொழுது உஷ்ணத்தையும் சிறிது அழுத்தத்தையும் உணர்கிறேன்..


ஒரு சிறு குழந்தையை கவனித்துப் பார்த்தோம் ஆனால் அதனுடைய நடவடிக்கை ..செயல்கள்..உணர்தல் மூலமே நடக்கிறது.. எங்கேயாவது இருந்து புது வாசம் வந்தால் அதை நோக்கி தவழ்கிறது.. அதை எடுத்து முகர்ந்து பார்க்கிறது.. ஏதாவது சாப்பிட கொடுத்தோம் என்றால் அதை உணர்ந்து சாப்பிடும்.. உதாரணத்திற்கு ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்தோம் என்றால் அந்த பழத்தை ரசித்து ருசித்து சாப்பிடும் போது அங்கு சாப்பிடுதல் என்ற செயல் மட்டுமே இருக்கும்.. அந்த குழந்தை அந்த செயலாகி மாறி போகிறது..  நாம் வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொள்கிறோம்.. நமக்கு இருக்கிற ஐந்து உணரும் கருவிகளை நாம் முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்தால்.. நாமும் குழந்தையாக.. முழு உயிர் திறனோடு.. முழு விழிப்புணர்வோடு வாழ முடியும்.. That's the doorway to The Divine .. 


நமது உணர்வுத் திறனுக்கான கருவிகள்.. இப்போது இருக்கும் சூழ்நிலையில் மிகவும் மந்தமாகி விட்டது என்பதே உண்மை.. ஏனெனில் இப்போது இருக்கும் டெக்னாலஜி மற்றும் மொழிகள் (Trying to verbalise everything) நமது விழிப்புணர்வை மற்றும் உயிர் தன்மை குறைக்கும் விஷயமாக ஆகிக்கொண்டிருக்கிறது.. காற்றை உணர்வோம்.. சூரிய ஒளியை உணர்வோம்.. இயற்கையின் ஒலிகளை கேட்போம்.. மணங்களை நுகர்வோம்.. எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பது .. நமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பது தேவையில்லை என்பதை உணர்வோம்.. மனிதத் தன்மையிலிருந்து கடவுள் தன்மைக்கு நகரும் சாத்தியத்தை அடைவோம்..


நாம் தொடர்வோம்..!


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்டுக்கொட்டக்கையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!

news

தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!

news

தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!

news

பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்