இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

May 13, 2026,06:13 PM IST

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து வாக்களித்தது அக்கட்சிக்குள் இருக்கும் பெரும் பிளவை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.


முதல்வர் விஜய் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அக்கட்சியின் 47 எம்.எல்.ஏ-க்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர்.


எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து 22 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதேசமயம், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதாவது எஸ்பி வேலுமணி தரப்பில்தான் அதிக அளவிலான அதிமுக எம்எல்ஏக்கல் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.


கொறடா உத்தரவை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு பெரிய குழு அரசுக்கு ஆதரவாக நின்றது அதிமுக தலைமையைத் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


துரோகம்... துரோகம்... பொங்கியெழுந்த ஈபிஎஸ்




இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். "இது அப்பட்டமான துரோகம். ஜெயலலிதா அவர்களின் புகழைச் சொல்லியும், இரட்டை இலை சின்னத்தில் நின்றும் வெற்றி பெற்றவர்கள் இன்று விசுவாசமின்றி செயல்பட்டுள்ளனர். கொறடா உத்தரவை மீறி, சட்டத்திற்குப் புறம்பாக தவெக அரசுக்கு அவர்கள் வாக்களித்துள்ளனர். அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவி போன்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி சிலர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர்," என ஆவேசமாகத் தெரிவித்தார்.


மேலும், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேர்வு முறையாக சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் தலைமையில் இந்த விதிமீறல் நடந்துள்ளது சட்டப்படி எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


அரசியல் பின்னணி


2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து அழுத்தங்களைச் சந்தித்து வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. முதல்வர் விஜய் தரப்பு இந்த ஆதரவை ஒரு தார்மீக வெற்றியாகப் பார்க்கிறது. அதே சமயம், எஸ்பி வேலுமணி தரப்பின் இந்தத் திடீர் மூவ், கொங்கு மண்டல அரசியலில் அதிமுகவின் பிடியைத் தளர்த்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


அடுத்தகட்டமாக, கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரை அணுகத் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் வரும் நாட்கள் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்