தேர்தல் களத்தில் VIP வாரிசு வேட்பாளர்கள்.. இவர்களில் யாருக்கு அமைச்சராகும் அதிர்ஷ்டம் இருக்கு?

Jun 03, 2024,06:11 PM IST

சென்னை :   நடந்து முடிந்த தமிழக லோக்சபா தேர்தல் 2024 ல் பிரபலமான அரசியல் தலைவர்களின் வாரிகள் பலரும் இந்த முறை வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். 


இவர்களில் பலர் அரசியல் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், ஒரு சிலர் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள வாரிசு வேட்பாளர்கள் பலரும், அவர்கள் சார்ந்த கட்சி மத்தியில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பையும் கொண்டுள்ளனர்.




குறிப்பாக தமிழிசை செளந்தரராஜன், கனிமொழி உள்ளிட்டோரை அந்தப் பட்டியலில் முதலிடத்தில் சேர்க்கலாம். காரணம், மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால், தமிழிசை தென் சென்னையில் வெற்றி பெற்றால், நிச்சயம் அமைச்சராக்கப்படுவது உறுதி. அதேபோல மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், கனிமொழியும் அமைச்சராகக் கூடும்.


சரி யார் யார் களத்தில் உள்ளனர்.. அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த ஒரு சுவாரஸ்ய அலசல் இதோ...


தமிழிசை செளந்தரராஜன் : 




பாஜக தலைவர், புதுச்சேரி கவர்னர், தெலுங்கானா கவர்னர் என பல பதவிகளை வகித்துள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தேசிய அளவில் பிரபலமானவர். பாஜக.,வின் முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவர். தமிழகத்தில் பாஜக.,வின் கை ஓங்குவதற்கு அடித்தளம் அமைத்த இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகள். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு, திமுக.,வின் கனிமொழியிடம் தோல்வி அடைந்த இவர், இந்த முறை தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ளார். தென் சென்னையில் அக்கா ஜெயித்தால், கண்டிப்பாக அமைச்சர்தான் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள்.


விஜய் வசந்த் :


வசந்த் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள் எம்.பி.,யான வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். தனது அப்பா வசந்தகுமாரின் மறைவிற்கு பிறகு கன்னியாகுமாரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானவர். இந்த முறையும் கன்னியாகுமரி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பாஜக.,வின் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை இந்த தொகுதியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என தீரவிமாக களமிறங்கி உள்ளதால் இங்கு பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


கனிமொழி :




திமுக மகளிர் அணி தலைவியாக இருக்கும் கனிமொழி, ஏற்கனவே தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பி.,யாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் தமிழிசைய வீழ்த்தி எம்.பி. ஆனவர். திமுக தலைவர் கருணாநிதியின் மகளான இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே சொல்லலாம். லோக்சபாவில் ஆளும் கட்சியை எதிர்த்து அதிகம் குரல் கொடுக்கும் எம்.பி.,க்களில் இவரும் ஒருவர். இந்த முறையும் தூத்துக்குடி தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளார். இந்த முறையும் இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.  மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் அமைச்சராகக் கூடும்.


விஜய பிரபாகரன் :


மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன். இவர் அரசியலுக்குள் நுழைந்ததுமே நேரடியாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதியவர் என்றாலும் அப்பா விஜயகாந்தின் செல்வாக்கை முன் வைத்து களம் காண்கிறார். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இதனால் ஸ்டார் தொகுதியாகி உள்ள விருதுநகரில் வெற்றி யாருக்கு என்பது கணிக்க முடியாததாக உள்ளது. ஆனால் இவர்களில் யார் வென்றாலும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.


கார்த்தி சிதம்பரம் :


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம். தற்போது சிவகங்கை தொகுதியின் எம்.பியாக உள்ளார். கடந்த தேர்தலில் இவர் பெற்ற வெற்றி செல்லாது என தொடரப்பட்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கையில் இந்த முறையும் சிவகங்கை தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளார். ஆதரவு பாதி, எதிர்ப்பு பாதி என்ற அளவிலேயே இவரின் வெற்றி வாய்ப்பு உள்ளது. மக்களின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியா  கூட்டணி வென்றால் கட்டாயம் இவருக்கும் அமைச்சர் பதவி கிடைத்து விடும்.


துரை வைகோ :




மதிமுக தலைவர் வைகோவின் மகன் துரை வைகோ. இவர் அரசியலுக்கு புதியவர் இல்லை என்றாலும் தேர்தல் களத்திற்கு புதியவர். இந்த முறை திருச்சி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் உள்ளதால் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே சொல்லப்படுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் துரை வைகோ அமைச்சராகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.


இவர்கள் தவிர மத்திய சென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி, பெரம்பலூரில் கே.என். நேருவின் மகன் அருண் நேரு உள்ளிட்ட மேலும் சில முக்கிய வாரிசுகளும் கூட களத்தில் உள்ளனர். நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில்,  இப்போதே அடுத்த மத்திய அமைச்சர் யார் என்ற பரபரப்பான விவாதமும் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்.. விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

news

ஆன்மீகம் அறிவோம்.. தேவலோகத்திலிருந்து.. பூமிக்கு வந்தபோது.. சிவன் என்ன செய்தார் தெரியுமா?

news

தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்