சென்னையில் மீண்டும் கன மழை.. பலத்த காற்றுடன் அடித்து விளாசியது!

Jun 22, 2023,03:31 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் ஒரு கன மழை வந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன்  மழை வெளுத்தெடுத்தது. இதேபோல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.



புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு  மழை வெளுத்துக் கட்டி சென்னையின் உஷ்ணத்தை உறிஞ்சிப் போட்டுச் சென்றது. இதனால் வெட்கை தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மழை நின்றதைத் தொடர்ந்து மீண்டும் வெயில் தலை காட்டியது.



காலையில் கூட சென்னையில் நன்றாக வெயில் அடித்தது. அடடா மறுபடியும் வெயிலா என்று மக்கள் மண்டை காய ஆரம்பித்த நிலையில் மாலையில் நிலைமை டக்கென தலைகீழாக மாறி மழையைக் கொண்டு வந்து மக்களின் மனதைக் குளிர வைத்து விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்