"டீம்ல சேர்க்கிறேன்.. பட் ஒழுங்கா விளையாடணும்".. யோகி பாபுவை கலாய்த்த தோனி!

Jul 11, 2023,04:30 PM IST
சென்னை: அம்பட்டி ராயுடு ரிடையர் ஆகிட்டார்..ஸோ இடம் காலியாக இருக்கு. நான் சொல்லி உங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் வாங்கித் தர்றேன்.. பட் நீங்க ஒழுங்கா விளையாடணும்.. என்று நடிகர் யோகி பாபுவை கலாய்த்துள்ளார் கூல் கேப்டன் எம்.எஸ். தோனி.

கிரிக்கெட்டில் ஜாம்பவனாகவும், பலருக்கு வாழ்க்கையில் ரோல் மாடலாகவும் திகழும் கேப்டன் தோனி தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் சென்னையில் நடந்தது.



இந்தப் படத்தில் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த விழாவின்போது யோகி பாபு, தோனியிடம் படு ஜாலியாக பேசினார். யோகி பாபு பேசும்போது தல.. என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கச் சொல்லுங்க.. நான் நல்லா கிரிக்கெட் ஆடுவேன் என்று சிரித்தபடி கூற அரங்கமே கலகலப்பானது.

தோனியும் விடவில்லை. பதிலுக்கு யோகி பாபுவை கலாய்த்தார். அவர் கூறுகையில் , அம்பட்டி ராயுடு ரிடையர்ட் ஆகி விட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் காலியா இருக்கு. நான் மேனேஜ்மென்ட்டிடம் பேசறேன். ஆனா நீங்க சினிமாவில் பிசியா இருக்கீங்களே.. நீங்க ஒழுங்கா தொடர்ச்சியா  விளையாடணும்.  அவங்க வேகமா வேற பவுல் பண்ணுவாங்க.. உங்களுக்கு காயம் ஏற்படுவது மாதிரி வேணும்னே போடுவாங்க.. பரவாயில்லையா.. என்று சொல்லிக் கொண்டே போக.. அங்கே சிரிப்பலை வெடித்துச் சிதறியது.

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்