நரம்பில்லாத "நாக்கு"தான்.. ஆனால் என்னெல்லாம் பண்ணுது பாருங்க.. வாவ்!

Sep 11, 2023,08:13 AM IST
டெல்லி:  இந்திய கிரிக்கெட் ஸ்டார் விராட் கோலியின் உருவத்தை தனது நாக்காலேயே வரைந்து அசத்தியிருக்கிறார் ஒரு இளைஞர்.

இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதுதொடர்பான ஒரு வீடியோ டிவிட்டரில் வேகமாக பரவி வருகிறது.



ஓவியத் திறமை கொண்டவரான இந்த இளைஞர்  விராட் கோலியின் முகத்தை அழகாக வரைகிறார்.. ஆனால் கையால் அல்ல.. தனது நாக்காலேயே வரைந்து அசத்துகிறார். கருப்பு நிற கலர் இங்க்கை தனது நாக்கில் தடவிக் கொண்டு வெள்ளைத் தாளில் விராட் கோலியின் முகத்தை  வரைகிறார். சும்மா சொல்லக் கூடாது.. சூப்பராக வரைந்திருக்கிறார்.

இவர் தீவிர விராட் கோலி ரசிகராம். விராட் கோலியை வைத்து ஏகப்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளாராம். வித்தியாசமான ஒரு டிரிப்யூட்டாக இருக்கட்டுமே என்று நாக்கில் வரைந்து காட்டி கலக்கி விட்டார்.

தங்களது ஆதர்ச நாயகர்களுக்காக விதம் விதமாக செய்வது ரசிகர்களின் வழக்கம்தான்.  சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மீது அபிமானம் வைத்திருந்த ஒரு ரசிகர், அவருக்காக ஒரு பிரத்யேக கிப்ட்டை ரெடி செய்திருந்தார். அது என்னவென்றால், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தின் மினியேச்சர் வடிவம்தான்.



சேப்பாக்கம் ஸ்டேடியத்தை அச்சு அசலாக அப்படியே குட்டி வடிவில் சூப்பராக உருவாக்கியிருந்தார் அந்த ரசிகர். கூடவே விளக்குக் கம்பங்களும் சேர்த்து பார்க்கவே பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த கிப்ட்டை தோனியிடம் கொடுத்து அவரையே ஆச்சரியப்பட வைத்தார்.

அந்த பாணியில் இப்போது இந்த விராட் கோலி ரசிகர் தனது ஓவியத் திறமையால் கோலி உருவத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ஆனால் இவர் ஒரு படி மேல போய் நாக்கினாலேயே படம் வரைந்து பிரமிக்க வைத்துள்ளார்.  இந்தப் படத்தை வரைந்தபோது ஒரு இடத்தில் கூட இவர் கையை பயன்படுத்தவே இல்லை.. எல்லாமே நாக்குதான்.



இந்த வீடியோவை விராட் கோலி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் கூட பாராட்டி வருகின்றனர்.

நரம்பில்லாதது நாக்கு என்பார்கள்.. அந்த நாக்கை அழகாக பயன்படுத்தி அசத்திய இந்த இளைஞரை கண்டிப்பாக பலே போட்டு பாராட்டலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

news

பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

news

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்