சண்டிகர்: காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், ஹரியானாவில் தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி இணைந்து போட்டியிட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இது பலன் தர வில்லை. ராகுல்காந்தி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. காங்கிரசும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது பாஜக அரசு. இந்நிலையில் ஹரியானாவில் பாஜகவிற்கு எதிரான அதிருப்தி அலை பெரும் சூறாவளியாக வீசுகிறது. இதனை சாதகமாக்கி பாஜகவை காலி செய்து விட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது. மெகா கூட்டணி உருவாகும் என்று எண்ணியிருந்த நிலையில், இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தது. ராகுல்காந்தியின் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்கு ஆரம்பம் முதலே பிடி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் ராகுல்காந்திக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேர்தலை தனித்து சந்திக்க காங்கிரஸும் தயாராக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
கருட பஞ்சமி .. திருமாலுடன் ஆதிசேஷனையும் சேர்த்து வணங்குவோம்.. அருள் பெறுவோம்
{{comments.comment}}