சென்னை: நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் என்று இயக்குனர் பாலாவுக்கு அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
பிதாமகன், நந்தா, சேது, நான் கடவுள், அவன் இவன், நாச்சியார், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. தனக்கென்று தனியாக ஒரு பாணியை வகுத்தவர் இயக்குனர் பாலா. தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிப்பார் என்று பாலா அறிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், பாலாவுக்கும் சூர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
அதன்பின்னர் இப்படத்தில் அருண் விஜய் முன்னணி கேரக்டரில் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்று விரைவில் வெளியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் பாலாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வணங்கான் படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்த அருண் விஜய் னெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு,
நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.
ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,
என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.
எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!
இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும்
திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்... என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}