அக்ஷய திருதியை.. தங்கம் மட்டும்தானா.. இதெல்லாமும் கூட வாங்கலாம் மக்களே!

Apr 29, 2025,02:19 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு ஆண்டு 20 25 ஏப்ரல் 30-ஆம் தேதி புதன்கிழமை சித்திரை 17ஆம்  நாள் அக்ஷய  திருதியை கொண்டாடப்படுகிறது.


"அக்ஷயம் "என்றால்  அள்ள அள்ள குறையாதது. அக்ஷய திருதியை என்பதன் பொருள் பன்மடங்கு வளரும் என்பதாகும். இந்நன்னாளில் எந்த செயல் செய்தாலும் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. எனவே, இந்த அக்ஷய திருதியை நாளில் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும்.


நேரம்: ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5: 29 மணி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி பிற்பகல் 2: 12 மணி வரை திருதியை திதி இருக்கிறது. மேலும் ரோகிணி நட்சத்திரம்  அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது.


அக்ஷய  திருதியை   'அக தீஜ்' என்றும் அழைக்கப்படுகிறது. இது மங்களகரமான நாள். இந்நாளில் விஷ்ணு, விநாயகர் ,லட்சுமி தயார் வழிபாடு செய்வது சிறப்பு. அக்ஷய திருதியை     அகதீஜ் அல்லது பரசுராம ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில்' அக்ஷய' என்ற சொல் நிச்சயம், அல்லது ஒருபோதும் குறையாதது, எல்லையற்றது என்பதை குறிக்கிறது. எல்லையற்ற அதிர்ஷ்டம், செழிப்பு, செல்வம் ஆகியவற்றை குறிக்கிறது.


அக்ஷய திருதியை நாளில் என்னென்ன செய்யலாம்:




ஒரு தொழிலை புதிதாக துவங்க நன்னாள் .புது வீடு கிரகப்பிரவேசம் செய்ய, புதிய வீட்டில் இடம் பெயர்வது திருமணங்கள், திருமணத்திற்கு பொருட்கள் வாங்க, நகைகள் வாங்க ,பட்டுப் புடவை வாங்க ,பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் ஆடை ஆபரணங்கள் வாங்க, சிறந்த நாள் .சீர் வைக்கும் பித்தளை ,வெள்ளி ,செம்பு பாத்திரங்கள் வாங்க சிறப்பான நாள் .செல்வச் செழிப்பும் லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள்.


"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது "என்பது பழமொழி .புதன்கிழமை அக்ஷய திரிதியை வந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .    *முதலீடுகள் :தங்கம், வெள்ளி ,வைரம் போன்றவற்றில் முதலீடு செய்வது அதீத நன்மை. ஆனால், நாளுக்கு நாள் தங்கம் விலை மடமடவெ என ஏற்றம் கொடுப்பது நம்மை திக்கு முக்காட வைக்கிறது. எனவே, தேவை உள்ளவர்கள் அவரவர் நிதிநிலைமை, சூழ்நிலைக்கு ஏற்ப தங்கம் வெள்ளி வைரம் வாங்குவது நன்மை. சென்று வருடம் ஒரு கிராம் வாங்கி இருந்தால் கூட இன்றைய  விலையில் லாபம் தான் இல்லையா?.... எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி நகைகள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும் .அக்ஷய திருதியை நாளன்று கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்க்கவும்.


* அக்ஷய திருதியை சூரியனும் சந்திரனும் அருகருகே உச்சம் அடைந்த நாள். 

* சூரியனையும் சந்திரனையும் வழிபடுவது சிறப்பு .கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிசங்கரால் உருவாக்கப்பட்ட தங்க நெல்லிக்கனி கொடுத்த நாள் என்று சிறப்பு இந்த அக்ஷய திரிதியை நாளுக்கு உண்டு. 

* அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியம் அளிப்பதாகும்.

* அன்னதானம் செய்துவிட்டு நமக்கு தேவையானதை வாங்கிக் கொள்வது சிறப்பு ,அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப வாங்குவதும் அன்னதானம் கொடுப்பதும் சிறந்ததாகும்.  

* முக்கியமாக மஞ்சள், குங்குமம், கற்கண்டு ,கல் உப்பு (மகாலட்சுமி வாசம் செய்வது) நவதானியங்கள், உணவுப் பொருட்களான -பருப்பு, அரிசி ,மஞ்சள் கொம்பு வாங்குவது சிறந்தது.

* அக்ஷய பாத்திரம் உருளியில் தண்ணீர் ஊற்றி, வாசனை மலர்களால் அலங்கரித்து அக்ஷய திருதியை நாளன்று வீடுகளில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

* அக்ஷய திரிதியை நன்னாள் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம், அதிர்ஷ்டம், ஆரோக்கியமான வாழ்க்கை ,நிறை செல்வம், உயர் புகழ் ,நல்ல எண்ணம் அருளப்பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ்வோமாக. மேலும் இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்