ஹாங்ஷூ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 2வது தங்கப் பதக்கத்தை இன்று பிற்பகல் வென்றது.
இன்று காலையில்தான் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இந்த நிலையில் தற்போது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று அசத்தியது.
சீனாவின் ஹாங்ஷூ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் நாளில் இந்தியா 3 வெற்றி இரண்டு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை அள்ளியது. இன்று 2வது நாளில் 2 தங்கத்தை வென்று அசத்தியது இந்தியா.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தியாவின் திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வர்ய் பிரதாப் சிங் டோமர், ருத்ரகன்ஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது.
தங்கப் பதக்கம் மட்டும் இல்லாமல், உலக சாதனையையும் படைத்தது இந்தியக் குழு. அதாவது 1893.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்தது இந்தியா. இதற்கு முந்தைய. உலக சாதனை புள்ளிகள் 1893.3 ஆகும். இதை சீனா படைத்திருந்தது. தற்போது சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வைத்து சீனாவை முந்தியுள்ளது இந்தியா.
2வது தங்கம்
இந்த நிலையில் பிற்பகலில் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்தது. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் இறுதிப் போட்டியில் மோதின. ஸ்மிருதி மந்தனா தலைமையில் ஆடிய இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.
முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்தது. அடுத்து பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.
கேப்டன் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
இதுரை 11 பதக்கங்கள்
இன்றைய போட்டியில் இன்னொரு வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது இந்தியா. ஆடவர் நால்வர் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் ஜஸ்வீந்தர், பீம், புனித், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் தற்போது 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதில் 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}