கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 869 கோடி அளவுக்கு நஷ்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளதாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை நடத்தியது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்றெல்லாம் அது எதிர்பார்த்தது. பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் விட்டதாம்.
இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் பாகிஸ்தான் முதல் ஆளாக இந்தத் தொடரை விட்டு வெளியேறியதால் உள்ளூர் ரசிகர்கள் கடுப்பாகி சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காணவே ஆர்வம் காட்டவில்லை. இதனால் மிகப் பெரிய இழப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. வீரர்களுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. கேப்டன் அடிக்கடி மாற்றப்படுகிறார். அணித் தேர்விலும் குழப்பம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திலும் குழப்பம், நிதியிருப்பும் கவலைக்குரியதாக உள்ளது. இப்படி பல சிக்கல்களில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில்தான் சாம்பியன்ஸ் டிராபிக்காக அது நிறைய முதலீடு செய்திருந்தது. ஆனால் ரிட்டர்ன் படு மோசமாக இருந்ததால் நஷ்டம் எகிறி விட்டதாம்.
கிட்டத்தட்ட 85 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். நம்ம ஊருக் கணக்கில் பார்த்தால் இது ரூ. 869 கோடியாகும்.
சாம்பியன்ஸ் தொடரில் மொத்தமே 2 போட்டிகளில்தான் விளையாடியிருந்தது பாகிஸ்தான். இரண்டிலுமே அது தோல்வியைத்தான் தழுவியது. முதல் போட்டி நியூசிலாந்துடன் லாகூரில் நடந்தது. அதில் படு தோல்வி அடைந்தது. அடுத்து துபாய் சென்று இந்தியாவுடன் மோதியது. அதிலும் தோல்விதான். 3வது போட்டியில் வங்கதேசத்தைச் சந்தித்தது. ஆனால் மழை காரணமாக போட்டியே நடக்காமல் போனது. தொடர் தோல்விகளால் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது பாகிஸ்தான்.
இந்தப் போட்டித் தொடருக்காக ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஸ்டேடியங்களை பெரும் பொருட் செலவில் புதுப்பித்திருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். போட்டிக்கான மொத்த பட்ஜெட்டில் இந்த ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிக்கே 50 சதவீதத்தை அது செலவிட்டுள்ளது.
தற்போது இந்த நஷ்டத்தை சரிக்கட்ட பல்வேறு சிக்கண நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளதாம் கிரிக்கெட் வாரியம். வீரர்களுக்கான செலவுகளையும் கூட குறைக்க அது உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}