டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோவிட் மீண்டும் பரவி வருகிறது. இது அபாயகரமானது இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் கூட இணை நோய்கள் உள்ளோர், வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மீண்டும் உலக நாடுகளில் கொரோனாவைரஸ் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் வைரஸ் வகையானது, எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேசமயம், பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக இது இல்லை. எனவே இந்த வகையான தொற்று ஏற்பட்டால் சில நாட்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம் உள்ளிட்டவை இருக்கும். உரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால் சரியாக விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், முதியோர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக நீண்ட நாள் இருக்கக் கூடிய இணை நோய்கள் உள்ளோர் தற்காப்பு நடவடிககைளை எடுப்பது நல்லது. உடம்பு சரியில்லாதவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து பொது இடங்களுக்கு குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணியுமாறு தமிழ்நாடு அரசு நேற்று அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக அளவிலான கொரோனோ தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 2000 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதற்கு அடுத்து மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 200 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதேசமயம், தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}