சிங்கப்பூர்: சிங்கப்பூரில் COVID-19 தொற்று அதிகரித்து வருவது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது LF.7 மற்றும் NB.1.8 என்ற புதிய ஒமைக்ரான் வகை வைரஸ்கள் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாக இருந்தாலும், பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
COVID-19 தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து பல அலைகளை நாம் பார்த்திருக்கிறோம். முதலில் UK-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்ஃபா வைரஸ் வேகமாக பரவியது. பிறகு டெல்டா வைரஸ் வந்து பல நாடுகளில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. அதன் பிறகு ஒமைக்ரான் வைரஸ் வந்தது. இது வேகமாக பரவினாலும், நோயின் தீவிரம் குறைவாக இருந்தது. ஆனால், தடுப்பூசி போடாதவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
தற்போது, சிங்கப்பூரில் புதிய ஒமைக்ரான் வகை வைரஸ்களான LF.7 மற்றும் NB.1.8 வேகமாக பரவி வருகின்றன. இவை JN.1 வைரஸின் சந்ததிகள் ஆகும். இந்த வைரஸ்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், நோயின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் 27 முதல் மே 3 வரை 14,200 பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட அதிகம். இதற்கு காரணம், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதும், புதிய வகை வைரஸ்கள் வேகமாக பரவுவதும்தான். LF.7 மற்றும் NB.1.8 ஆகிய இரண்டு வைரஸ்களும் சேர்ந்து, நாட்டில் உள்ள COVID-19 பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த வைரஸ்களை "கவலைக்குரிய மாறுபாடு" என்று இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், அவை வேகமாக பரவுவதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த புதிய வகை வைரஸ்களால் ஏற்படும் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானதாகவே உள்ளன. முந்தைய ஒமைக்ரான் வைரஸ்களால் ஏற்பட்ட அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன. அவை: தொடர்ச்சியான இருமல், தொண்டை வலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் சிவத்தல் (pink eye), மூளை மந்தம் அல்லது குழப்பம் ஆகியவை ஆகும். பெரும்பாலான நோயாளிகள் வீட்டிலேயே குணமடைகிறார்கள். ஆனால், உடல்நிலை மோசமானால் மருத்துவரை அணுகும்படி MOH அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய COVID-19 தடுப்பூசிகள் இந்த புதிய வகை வைரஸ்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கின்றன. JN.1 வைரஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நல்ல பாதுகாப்பைத் தருகின்றன. எனவே, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோர் தடுப்பூசி போடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் தங்கள் கடைசி டோஸுக்குப் பிறகு சுமார் ஒரு வருடம் கழித்து கூடுதல் டோஸ் பெற வேண்டும் என்று MOH தெரிவித்துள்ளது. ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
இந்த அலையின் விசித்திரமான அம்சம் என்னவென்றால், இது கோடை காலத்தில் ஏற்படுகிறது. பொதுவாக, சுவாச வைரஸ்கள் குளிர் மாதங்களில் தான் அதிகமாக பரவும். ஆனால், இந்த முறை கோடை காலத்தில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. ஹாங்காங் மற்றும் தாய்லாந்து போன்ற பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது. LF.7 மற்றும் NB.1.8 ஆகியவை அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவை வேகமாக பரவுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. JN.1 வைரஸ் இதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை பாதிப்பு அதிகமாக இல்லை என்றாலும், அலட்சியமாக இருக்கக் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அலை ஆல்ஃபா அல்லது டெல்டா வைரஸ் போல தீவிரமாக இல்லாவிட்டாலும், நாடுகள் தங்கள் பாதுகாப்பை குறைக்கக் கூடாது. COVID-19 தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புதிய வைரஸும் புதிய ஆபத்துகளை கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}