- ஔவை அ.ர.தீபாரவி
வறண்ட நிலம் மேல் நோக்கிப் பார்த்ததென்ன
உருண்டு திரண்டு முகிற்கூட்டம்
ஒன்று சேர்ந்ததென்ன!
காருண்ட வெண் பொதிகள் கரைந்தே அழுததென்ன!
வெள்ளி நிறத் துளிகள்
மண்ணோக்கி
விழுந்ததென்ன
உறங்கிக் கிடந்த விதைகளும் துளிர் விட்டதென்ன

கிளைகளும் அசைந்தாடி அழகிய
நடனம் ஆடியதென்ன
சில்லென்ற காற்று நெஞ்சோரம் சிம்பொனி பாடியதென்ன
அள்ளுகின்ற மண்வாசம்
நாசி வழியே
நுழைந்ததென்ன
சொல்கின்ற சொல்லெல்லாம் பசுமை நிறம் குடிகொண்டதென்ன
காண்கின்ற காட்சியெல்லாம் களிப்பு வந்து கூடியதென்ன
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
கடல் ஒரு கவிதை!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
A Tribute to Actor Nagesh: தாய் நாகேஷ்!
தேடித் தேடி...!
{{comments.comment}}