Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!

Jun 20, 2026,03:50 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அப்பா என்பவர் நம் உயிர் மட்டுமல்ல நம் உலகம், 

உயிரணுவில் நம்மை உருவாக்கி தாய்மையெனும் புனிதம் காத்தவரப்பா, 


கருவில் வந்த நாள் தொட்டு கற்பனையைத் தீட்டியவரப்பா,

தொட்டுத் தொட்டுப் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தவரப்பா,


உன் விரல் பிடித்த தொப்புள் கொடியுறவு நான் தானே அப்பா,

தன் வியர்வையை சிந்தி என்னை விளை நிலம் ஆக்கினாரெம்மை,


உளிக் கொண்டு தன்னைத்தானே செதுக்குவார் அப்பா,

ஊமையாய் அவர் இருந்து உருகி உருகியே உயர்த்துவார் நம்மை,


நம் வாழ்க்கையே ஒளி பெற செய்த உன்னதமே,

நான் முதல் ஏறிய விமானம் உன் தோள் தானே அப்பா, 


உலகத்தை சுற்றிக் காட்டிய ஒப்பற்ற அற்புதக் கடவுளே நீதானப்பா,

கந்தையாடை உன் சொந்தமானாலும் 

விந்தைகள் படைக்க பிரம்மன் செதுக்கிய ஓவியம் நீதானப்பா, 




வம்சத்தின் ஆணிவேரே வாழ்க்கைப் பாடத்தில் வீரத்தின் அடையாளமே, 

வாடாத முகமும் ஓயாத கால்களும் எங்களுக்காகவே,


பனி,மலை, குளிர், இரவு பகலிலும் நின் பணி 

குடும்பத்துக்காகவே,

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை வணங்குகிறேன் உங்களை.....


எங்களுக்கு முதலாக இருப்பதால் தான் உங்கள் பெயரின் முதல் எழுத்து எங்களுக்கு,

பத்து மாதம் கருவில் சுமக்கவில்லை என்பது உண்மை தான்

ஆனால் வாழ்நாளையே எங்களுக்காக  அர்ப்பணித்த தெய்வம் தாங்கள்,


கடவுள் தந்த வரமல்ல தாங்கள் அப்பா, 

கடவுளாகவே எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் தான் அப்பா!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்