சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கும், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.25 குறைந்து ரூ.6,825க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைலேயே இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. இந்நிலையயில், புரட்டாசி மாதம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை நகை விலை குறைந்தே உள்ளது. நாட்டில் நிலவும் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.25 குறைந்து ரூ.6,825 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.68,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,82,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,445 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,560 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.74,450 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,44,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,460க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,830க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 768 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.960 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,600 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.96,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}