கதை கிடைச்சிருச்சு.. அடுத்த படம் ஸ்டார்ட்..  மாஸ் காட்டிய லெஜன்ட் சரவணன்!

Aug 15, 2023,01:55 PM IST
சென்னை: அடுத்த படத்துக்கான கதை கிடைச்சிருச்சு.. சீக்கிரமே ஆரம்பிச்சுடலாம் என்று லெஜன்ட் சரவணாஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபரும், நடிகரும், தயாரிப்பாளருமான லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

லெஜண்ட் சரவணாஸ்டோர் அதிபரான , லெஜன்ட் சரவணன் யாரும் எதிர்பாராத வகையில் நடிகரானவர். அவரே தயாரித்து, நடித்து வெளியான படம்தான் லெஜன்ட். திரைத்துறையில் டாப்பில் உள்ள டெக்னீஷியன்களைப் பயன்படுத்தி பெரும் பொருட் செலவில் அப்படத்தை தயாரித்தார் லெஜன்ட் சரவணன்.



அவரை பாப்புலராக்கிய ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள்தான் இப்படத்தையும் இயக்கினர். சரவணா ஸ்டோர் விளம்பரங்களின் வெற்றிக்கு ஜேடி ஜெர்ரிதான் காரணம். அவர்களை வைத்தே தனது முதல் படத்தின் நாயகனாக என்ட்ரி கொடுத்தார் சரவணன்.

அப்படத்துக்குப் பின்னர் அவரைக் காணவில்லை. பிசினஸில் மீண்டும் தீவிரமாகி விட்டார். அடுத்து அவர் என்னசெய்யப் போகிறார்..என்ன படம் நடிக்கப் போகிறார் என்ற கேள்விகள்  தொடர்ந்துகொண்டே வந்தன. இந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார் சரவணன்.



சுதந்திரதினத்தையொட்டி அவர் குழந்தைகளைச் சந்தித்தார். இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது அடுத்த படம் குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில் ஒரு குட்டிப் பாப்பா, அங்கிள் உங்களோட அடுத்த படம் எப்போ என்று கேட்கிறார். அதற்கு சரவணன், நல்ல கதைக்காகத்தான் காத்திருந்தேன். இப்ப கிடைச்சிருச்சு.. சீக்கிரமே நடிச்சு வெளியிட்ரலாம் ஓகேவா என்று பதிலளித்து குட்டிப் பாப்பாவை குஷியாக்குகிறார்.

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகளையும் லெஜன்ட் சரவணன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். கூடவே குட்டீஸ்களுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் வரும் தலைவரு நிரந்தரம் பாடலுக்கும் சூப்பராக ஆடியுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், தலைவா இந்தப் பாட்டை உங்க படத்துல வச்சிருக்கலாமே போலயே.. சூப்பரா ஆடறீங்களே என்று கலகலக்க வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!

news

சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

news

ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2025... இன்று அன்பு பெருகும்

அதிகம் பார்க்கும் செய்திகள்