மதுரை: கரூர் சம்பவம் தொடர்பாக தங்களைக் கைது செய்யத் தடை விதிக்கக் கோரியும், முன்ஜாமீன் கோரியும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று மாலை தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரையும் இரவோடு இரவாக கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது கரூர் காவல்துறை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். அவர் சார்பிலும் நிர்மல் குமார் சார்பிலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அந்த மனுக்கள் இன்று நீதிபதி ஜோதிராமன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது தவெக தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நாங்கள் கொலை செய்யும் நோக்கில் செயல்படவில்லை. நடந்தது விபத்து. காவல்துறை நடத்திய தடியடியே இந்த பிரச்சினைக்குக் காரணம் என்பது உள்பட பல்வேறு வாதங்களை தவெக தரப்பு வைத்தது. பதிலுக்கு காவல்துறை தரப்பிலும் கடுமையான பதில் வாதங்கள் வைக்கப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் கடுமையான பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் நீங்கள். அப்படியானால் கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்களா என்று தவெக தரப்பை நோக்கி கேட்டார்.
காராசரமான விவாதத்திற்குப் பின்னர் இன்று மாலையில் இருவரது முன்ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து இரு நபர் பெஞ்ச்சில் தவெக தரப்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், புஸ்ஸி ஆனந்த்தையும், நிர்மல் குமாரையும் இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}