மும்பை: மும்பையில் சரிதா சல்தான்ஹா என்ற பெண் தனது வளர்ப்பு நாய் டைகருக்கு 2.5 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை வாங்கி மாட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார். அந்த நாய்க்கு பிறந்த நாள் பரிசாக இந்த தங்கச் சங்கிலியாம். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்வில் பிறந்தநாள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த பிறந்தநாளில் நமக்கு பிடித்த நபரை இம்ப்ரஸ் செய்வதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரியாக பரிசளிப்பது வழக்கம். அப்படி ஒவ்வொருவரும் விதவிதமான பரிசுகளை தனது காதலன், காதலிக்கோ அல்லது தனது அன்பு மனைவிக்கோ அல்லது கணவருக்கோ, மற்றவர்களுக்கோ கொடுப்பதுண்டு. இதில் என்ன சுவாரசியம்.. இது உலக வழக்கம்தானே அப்படின்னுதானே யோசிக்கறீங்க.
ஆனா இந்த பிறந்தநாள் பரிசுல ஒரு சுவாரசியம் உண்டு. இந்த பிறந்தநாள் பரிசு ஒரு மனிதருக்கு கிடையாது. ஒரு நாய்க்கு. நாய்க்கா... நாய்க்கு சாப்பாடு, பால் கொடுக்கலாம் அல்லது அதற்கு பிடித்த உணவை கொடுக்கலாம்.. அது எப்படி பரிசு கொடுக்க முடியும் அப்படின்னுதானே கேக்குறீங்க.
பெரும்பாலானவர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது குறிப்பாக நாய்களின் மீது அதிக பாசமும் காதலும் வைத்துள்ளனர். நாய்களை தன் குழந்தைகளைப் போல் கவனித்துக் கொள்ளுதல், வெளியே எங்கு சென்றாலும் அதனையும் தன்னுடனே அழைத்துச் செல்லுதல், இப்படி நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் நிறையபேர் உள்ளனர். அதை விட அதை நாய் என்றே சொல்ல மாட்டார்கள்.. பிள்ளை, தம்பி, குட்டி என்றுதான் அழைக்கிரார்கள். இது தவிர நாய்களுக்கு மனிதர்களின் பெயரை வைத்து அதற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழவும் செய்கிறார்கள்.
இப்படித்தான், மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சரிதா சல்தான்ஹா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை மிகவும் பாசமாகவும், அன்பாகவும் கவனித்து வருகிறார். அதற்கு டைகர் எனவும் பெயரிட்டுள்ளார். அந்த டைகர் நாய்க்கு நேற்று பிறந்தநாள் வந்துள்ளது. டைகரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளனர். அந்த நாயை அருகே உள்ள அனில் ஜூவல்லரிக்கு அழைத்துச் சென்றார். நாயுடன் ஒரு பெண்மணி கடைக்கு வந்தவுடன் கடையில் பணிபுரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைக்கு வரும் கஸ்டமரை கனிவுடன் கவனிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அங்குள்ள பணியாளர்கள் விதவிதமான தங்க செயினை அந்தப் பெண்ணிடம் காட்டி உள்ளனர். அந்த பெண் தங்கச் செயினில் ஒரு செயினை எடுத்து தனது வளர்ப்பு நாய்க்கு போட்டு அழகு பார்த்துள்ளார். அந்த தங்கச் செயினின் மதிப்பு ரூபாய் 2.5 லட்சம்.
அதன் பிறகுதான் கடைக்காரர்களுக்குப் புரிந்துள்ளது, அவர் செயின் வாங்க வந்தது தனது நாய்க்கு என்று. வினோதமான நிகழ்வை பார்த்ததும் ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்ததுடன் வீடியோவாக பதிவேற்றம் செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தங்க செயின் போட்டு இருக்காங்க.. பாத்து பத்திரமாக போங்க.. உங்கள் செல்ல நாயையும் பத்திரமாக பார்த்துக்கோங்க என கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}