சென்னை: சென்னையில், 8 கி.மீ. தொலைவிலான ஹெல்த் நடைபாதையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களும் ஆர்வமுடன் மழையில் நனைத்தபடி கலந்து கொண்டனர்.
சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற பெயரில் நடைபாதை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மழையில் நனைந்தபடி தொடங்கி வைத்ததுடன் நனைந்தபடி சென்னை பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை சாலைவரை 8 கிலோமீட்டர் நடைப் பயிற்சி மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் சிறப்பு கல்வெட்டினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் காப்போம் திடத்தினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
பின்னர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவை உறுப்பினர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, பிரபாகர்ராஜா, காரம்பாக்கம் கணபதி ஆகியோர் மழையை பொருட்படுத்தாது பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இந்த 8 கிலோ மீட்டர் சாலையில்தான் நடக்க வேண்டும் என்று இல்லை. நடக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு நோய் உலகில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஒரே தீர்வு நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் தான். நோய் வருவதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம். எதையும் முறையாக தொடங்கி வைத்தால் பாதி முடிந்தது போல். தமிழகத்தில் இந்த திட்டம் சிறப்பான திட்டமாக அமையும் என்றார்.
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
{{comments.comment}}