என்னவள் மனம்!

Jun 26, 2026,04:04 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 

உன் நினைவு வந்து 
என்னை வெல்லும்! 
நாணம் வந்து 
என்னைக் கொல்லும்! 

தீராக் காதலால் 
முகமும் சிவக்கும்!
நீ கொஞ்சும் போது 
இத்தனையும் நடக்கும்!

பாவம் மங்கை 
என் செய்வேனோ? 
பாசத்தாலே 
மயங்கி நிற்பேனோ!

நீ இருக்கின்ற போது 
பொய்க் கோபம் கொண்டு
நீ இல்லாத போது 
கவலைப்பட்டுக் கொண்டு 





உன்னையே நினைத்து 
உருகுமே என் வதனம்! 
அதுவல்லவோ என் 
சிங்காரச் சீதனம்!

மாளிகைக்கு வா!
எனக்கு மனம் நிம்மதி தா!

(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்