காலத்துக்கும் நீ தான் அந்த வீட்ல.. (புதுவசந்தம் 6)

Nov 05, 2025,04:27 PM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி


அம்மா உன் வீட்டுக்காரர் ஏம்மா இப்படிப் பிடிவாதம் பண்றாரு? என் கல்யாணம் விஷயத்துல எனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் இருக்குல்ல. அதை ஏம்மா இவரு புரிஞ்சிக்க மாட்டேன்றாரு? 


ஏண்டா உன் விருப்பம் என்னனு நீதான் அந்த மனுஷன்கிட்ட ஸ்ட்ராங்காப் பேசி சம்மதிக்க வைக்கணும். அதவிட்டு ஏன் இப்படிப் புலம்பற? 


அம்மா நான் பேசுறதக் கொஞ்சம் கூடக் காது கொடுத்துக்கேட்கத் தயாரா இல்லாத உன் புருஷன்கிட்ட நான் எதைச்சொல்லி சம்மதிக்க வைக்கிறது?


அம்மா ப்ளீஸ் மா எனக்காக நீயாவது அப்பாகிட்ட பேசுறியா?




ஏண்டா நீ அவரோட செல்லப்பிள்ளை. நீ சொல்லிக் கேட்காத மனுஷன் நான் சொன்னா மட்டும் அவரு முடிவை மாத்திப்பாருனு நினைக்கிறியா? நிச்சயமா உங்க அப்பா அவ்வளவு சீக்கிரம் மனசு மாற மாட்டாருப்பா. அவர்ட்ட பேசுறதவிட சுவத்துல முட்டிக்கலாம்.


என்னம்மா நீயும் இப்படிச் சொல்ற. இப்போ நான் என்ன பண்றது?


ஒன்னு உருப்படியா ஏதாவது காரணம் சொல்லிப்பாரு. இது உன் வாழ்க்கை. நீதான் பேசிப்புரியவைக்கனும். இல்லையா அவரு சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க வேற வழியில்ல சுந்தர்.


உன் கிட்டப் போய் யோசனை கேட்டேன் பாரு என்றுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.


அன்று மாலை மீண்டும் மூர்த்தி என்ன சுந்தர் என்ன முடிவெடுத்திருக்க கேட்டார்.


அப்பா எனக்கு இப்போ கல்யாணம் பண்ற எண்ணமே இல்லை. இந்தப் பேச்சை இதோடு விடுங்களேன்  என்றான் முடிவாக.

ஏன் சார் கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க? காரணம் என்னனு நான் சொல்லவா?


நீ உங்க அம்மாவோட சொந்தத்துல அந்த வித்யாவைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புற. ஆனால் அதுக்கு நிச்சயமா நான் ஒத்துக்க மாட்டேன். ஏண்டா குடும்பமாடா அது. அந்தக் குடும்பத்துல அத்தனை பேரும்,எல்லாரும் திமிரு புடிச்சதுங்க. அந்தப் பொண்ணு கூடப்பிறந்தது நாலும் பொண்ணுங்க. ஆண் வாரிசு இல்லாத குடும்பம். அந்தப் பொண்ணு வித்யாவை நீ கட்டிக்கிட்டேனு வை. காலத்துக்கும் நீ தான் அந்த வீட்ல எல்லாருக்கும் எல்லா நல்லது கெட்டதும் செய்யனும். இதே நான் பார்த்த பெண் சுகந்திய கட்டிக்கிட்டா உனக்கு எந்தக் குறையும் இருக்காது. அழகு, படிப்பு, வசதினு எல்லாம் இருக்கு. அந்தப் பொண்ணுக்கு அக்கா, தங்கச்சி, தம்பிகள் இருக்காங்க. நாளைக்கு உனக்கு ஏதாவது கஷ்டம்னா அந்தப் பசங்க வந்து நிப்பாங்க.


எல்லாத்துக்கும் மேல இன்னைக்கு வரைக்கும் அவங்க கூட்டுக்குடும்பமா ஒரே வீட்ல ஒத்துமையா சந்தோசமா வாழ்றாங்க. அந்த சுகந்தி இந்த வீட்டுக்கு மருமகளா வந்துட்டா நம்ம குடும்பம் உடைஞ்சிடாமப் பார்த்துப்பாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதெல்லாம் உனக்கெங்கே புரியப்போகுது? சுந்தர், நான் சொல்றதக் கேளு. நிச்சயமா உன் எதிர்காலம் நல்லாயிருக்கும். இல்லையா கேட்பார் பேச்சைக் கேட்டு உருப்படாமப்போ என்று ஆவேசமாகிக் கத்தினார் மூர்த்தி.


அப்பா நான் என்ன சொல்ல வரேன்னு தயவுசெய்து கொஞ்சம் பொறுமையா கேட்டுட்டு அப்புறம் கோபப்படுங்க.


என்ன சொல்லப்போற?


சீக்கிரமாச் சொல்லு.


அப்பா கல்யாண வயசைத் தாண்டி எனக்கு ரெண்டு அண்ணன் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் பண்றத விட்டுட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்கன்னா அண்ணன்க ரெண்டு பேரும் மனசு வருத்தப்படமாட்டாங்களா? நாளைக்கு அவங்க வாழ்க்கை என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா? இல்ல அண்ணன்க ரெண்டு பேரும் என்னைப் பற்றி கேவலமா நினைக்க மாட்டாங்களாப்பா?


ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க அப்பா.


சுந்தர் நீ சொல்றது எல்லாம் சரிதான். எனக்கு ஐந்து ஆம்பளப் புள்ளைங்க இருக்காங்கனு ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்டேன் ஒரு காலத்தில. உங்க எல்லோரையும் நல்லா தான் படிக்கவச்சேன். இதுல நீ மட்டும் தான் என் பேரு சொல்றமாதிரி படிச்சு நல்ல உத்யோகத்தில இருக்க. ஆனால் உன் அண்ணன்களும், தம்பிகளும் ஒழுங்காப் படிக்காம, எந்த வேலைக்கும் போகாம வெட்டியா ஊர் சுத்திக்கிட்டு இருக்கானுக. இந்த நிலமைல உன் அண்ணன்களுக்கு எவன் பெண் கொடுப்பான். இல்ல பெண்ணைப் பெற்றவன் எல்லாம் சுத்த மடையன்னு நினைச்சிட்டியா? எனக்கும் அவனுக எதிர் காலத்தை நினைச்சு வருத்தமாகத்தான் இருக்கு. ஆனால் இப்போ எனக்கு வேற வழி தெரியலப்பா.உன் அண்ணன்களுக்கு எப்போ பொறுப்பு வருமுன்னுந் தெரியல. அதுக்குள்ள உனக்கு வயசாகிடும். சொல்றேனு தப்பா எடுத்துக்காத சுந்தர். இப்பவே உனக்கு தலைல பாதி வழுக்கை ஆகிடுச்சு. உன் வேலை, வருமானத்தை வச்சி யாராவதுஉனக்கு பெண் கொடுத்தால் தான் ஆச்சு. இல்லைனா உனக்கும் அவ்வளவு சீக்கிரத்துல கல்யாணம் ஆகும்ங்குற நம்பிக்கை எனக்கு இல்லை. இதுக்கு மேல உனக்கு எதைச் சொல்லிப் புரியவைக்கனும்னு எனக்குத் தெரியலப்பா. அப்புறம் உன் இஷ்டம் என்றவர் சுந்தரை ஏறிட்டார்.


சுந்தர் எனக்கு இன்றோடு அலுவலக விடுப்பு முடியுது. இன்னிக்கு ராத்திரி நான் கொல்லம் எக்ஸ்பிரஸ்ல கேரளாவுக்கு கிளம்புறேன். நாளை சண்டே ரெஸ்ட் எடுத்துட்டு நாளை மறுநாள் டியூட்டில ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன். அப்புறம் நீ உன் அண்ணன்களைப்பத்திக்கவலைப்படத் தேவையில்லை. நான் பார்த்துக்கறேன்பா. கவலைப்படாதே. அவனுக வாழ்க்கை வீணாகிப்போக விடமாட்டேன் நான். என்னைய நம்புப்பா. எனக்கு நீ சீக்கிரம் நல்ல பதில் சொல்லுவேனு நம்புறேன். இந்தா இந்தக் கவர்ல சுகந்தியோட சில போட்டோஸ் இருக்கு. போட்டோவை நீயும் பாரு. உன் பிரெண்ட்ஸ் கிட்டேயும் காட்டு. உன் பிரெண்ட்ஸ்ங்களும் கூட ஏன்டா., இந்தப் பொண்ணைப் போய் வேண்டாம்னு சொல்றியே, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்குனு தான் கேட்பாங்களே தவிர யாரும் இந்தப் பெண்ணை வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க என்றவர் மனைவியை ஏறிட்டார்.


ஏண்டி நான் ஒருத்தன் இப்படி நாயாக்கிடந்து கத்திக்கிட்டு இருக்கேன். நீ எனக்கென்னனு இப்படி வாயத்தொறக்காம இருந்தா என்னடி அர்த்தம்? அவனுக்கு நல்லா புத்தியில உறைக்கிறமாதிரி எதுவும் சொல்லமாட்டியா?


அது சரி. நீ எப்படி அவனுக்கு புத்தி சொல்லுவ? உன் அக்கா பேத்தி வித்யாவை கட்டிக்கச் சொல்லி இவன் மனசைக் கெடுத்தவளே நீ தானே. நான் ஒரு பைத்தியக்காரன். உன்கிட்டப் போய் நியாயம் கேட்டுப் பேசிட்டு இருக்கேன் என்றார் மூர்த்தி நமுட்டுச்சிரிப்புடன் தன் மனைவியைப்பார்த்து.


இப்போ என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க. இந்த வீட்ல எனக்கென்ன மரியாதை இருக்குது. இல்ல என் விருப்பத்தை யாரு கேக்குறீங்க. நீங்களாச்சு உங்க மகனாச்சு. தேவையில்லாத பேச்சு வேண்டாம்னு அமைதியா இருக்கேன். என்னைச் சீண்டிப்பார்த்தா அப்புறம் நான் எதுனா சொல்லிப்புடுவேன் ஆமா. போங்க  போய் ஊருக்கு கெளம்புற வழியைப்பாருங்க. வந்துட்டாரு வம்பிலுக்க என்றபடி மூர்த்தியை முறைத்துவிட்டுக் கடந்தாள் அவர் மனைவி சகுந்தலா.


(தொடரும்)


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!

news

தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்

news

கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!

news

கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி

news

துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!

news

நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!

news

30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்