Short Story: சாந்தா!

Aug 10, 2026,01:16 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


சாந்தா எதேர்ச்சையாக சன்னல் வழியாகத் தெருவைப் பார்க்க நேர்ந்தது. அட! இப்போது போனவர் "என் அப்பா மாதிரியே இருக்கிறார்", என்று நினைத்துக் கொண்டே  தூக்கத்திலிருந்து அழும் குழந்தை சீதாவை சமாதனம்  செய்ய முயன்றாள்; தன்னையும்கூட....


மனம் பின்னோக்கி ஓடியது. திருமணத்தில் "நகை நட்டு" சம்பந்தமான வந்த தகராறில். அவள் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் பிறந்த வீட்டு தொடர்பு அற்று விட்டது. கணவன் மூர்த்தி நல்லவன் தான். அவளை நன்றாகப்  பார்த்துக் கொண்டாலும், அக்காள் மீனாவின் கோட்டை தாண்டி அறியாதவன். இத்தனைக்கும் தன் மூத்த அக்காள் மகளைத் தான்  திருமணம் செய்திருந்தான்.


வாசலை யாரோ தட்டும் ஓசை. "யாராய் இருக்கும்?".அவருடைய நண்பர் "ஓட்டல் சேஷன்" தான். " அம்மா! சாந்தா! உன் அப்பா வந்திருக்கிறார்; பார்" என்றார். பின்னால் நின்றவரைப் பார்த்து அதிர்ந்து சிலையானாள். சற்று நேரத்திற்கு முன் அவரைத்தான் நான் என் அப்பா போல் இருக்கிறார் என்று தோன்றியது; எனக்கு. அந்த அளவிற்கு என் அப்பா முகம் கூட மறந்து விட்டிருந்தது. காலத்தின் கோலம்!




"அண்ணா! அவர் போடி வரை போயிருக்கிறார்‌. நான் என்ன செய்வேன்? அவர் கோபிப்பார்" என்றாள், சாந்தா.


"அதெல்லாம் ஒன்றும் இல்லை. பயப்படாதே!  அப்பாவை உள்ளே கூப்பிடு. சாப்பிடச்  சொல். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  


அப்பாவை உள்ளே கூப்பிடுவதில் தயக்கம்.தன்மானமும் இடம் கொடுக்கவில்லை.ஒரு செம்பு தண்ணீருடன் வரவேற்று,  திண்ணையிலேயே உட்கார்த்தி வைத்து, வாசல் படியிலேயே உட்கார்ந்து, கண்ணில் நீருடன் ஏழு வருடக் கதைகளை ப் பேசிக்கொண்டிருந்தாள்.


"வாங்கோ! வாங்கோ! அத்திம்பேர்! "என்ற  குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்ப; புன்னகையுடன் மூர்த்தி.


"ஏன்னா! உங்களுக்கு கோபம் இல்லையே" , என்று கேட்க ; என்ன இப்படி கேட்கிறாய்? அத்திம்பேரை சாப்பிடச் சொல். எனக்கும் தட்டைப் போடு", என்று கூற சூழ்நிலை எளிதாகியது. சாந்தாவின் கண்களில் புதிய  மின்னல்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலகத்தில் சிறந்த பூ எது?

news

பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்