- விஜயலக்ஷ்மி கண்ணன்
கையை கட்டிக் கொண்டு ,வாயைப் பொத்திக்கொண்டு நிம்மி கண்கள் மிரள அந்த அறையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து தன் நிலை மறந்தாள்.
நேற்று இரவு கூட அந்த கத்தலும் ஆர்ப்பாட்டமும் தாண்டவம் ஆடியது.இன்று எல்லாம் ஓய்ந்து போய் விட்டதே!
அறை என்று சொன்னால் அதற்கு கூறையோ சுவர்களோ எதுவும் இல்லை.
மண் தரை,வெட்டவெளி,எங்கும் ஓலம். எஸ்டேட்டில் தினக் கூலிக்கு வேலைக்கு போகும் வெள்ளைச்சாமி
மாலையில் கூலி வாங்கிய கையோடு ஆஜர் ஆகும் இடம் கள்ளுக் கடை.
இரவு ஏன் வருகிறது என்று நொந்து வேதனைப் படும் பல பெண்களின் வரிசையில் நிம்மியும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றவlள் தான்.வெள்ளைச்சாமியின் அசிங்க வார்த்தைகள் நாராசமாக காதில் விழுந்து காதே
அடைந்து விட்டது நிம்மிக்கு.

நல்ல வேலைக்காரன் என்று பெயர் வாங்கி என்ன பயன், ஒரு நல்ல புருஷனாக இருக்க முடியவில்லையே!
நேற்று இரவு 10 மணி சுமாருக்கு கஞ்சியை குடித்து விட்டு தரையில் சுருண்டு சாய்ந்த அவள் திடீர் என்று பயங்கர சத்தமும் ஓலாமும் கேட்டு எழுந்தவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.
அவளை தவிர வேறு ஒரு ஜீவன் கண்ணில் தெரியவில்லை.
அன்று கண்டபடி தகாத வார்த்தைகள் பேசி வார்த்தை நீண்டு குடி போதையில் தள்ளாடிய படியே வெளியே போய் படுத்த வெள்ளைச்சாமி மண்ணோடு புதைந்து விட்ட கொடுமை.
பல தடவை யோசித்தாள்.
நேற்று மட்டும் வெளியே போய் படுக்காமல் இருந்து இருந்தால் அவளோடு அவனும் பிழைதிருப்பான் அல்லவா?
எல்லாம் விதி!
தினம் அவன் படுத்தும் பாடு அவள் மனதை மிக்வும் பாதித்து அவளை தற்கொலை செய்ய தூண்டிய அளவிற்கு கொண்டு போய் பிறகு அவள் சிநேகிதிகள் புத்தி சொல்லி அவள் துணிவோடுவாழ்கையை சந்திக்க தயார் ஆனாள்.
அதற்குள் எல்லாம் முடிந்து விட்டதே! வயநாட்டின் இயற்கை பேரிடர் உயிரோடு மக்களை மண் சரிவில் புதைத்து
ஊரையே சுடுகாடு ஆக்கி விட்டது.
நிம்மி எழுந்தாள்.
அழிந்த கிராமத்தை பார்த்து அதிர்ந்த அவள் என்ன செய்யப் போகிறாள்?
ஏன் அவள் மட்டும் உயிர் தப்பித்தாள்?
பல இரவுகள் வெள்ளைச்சாமி இறக்க வேண்டும் என்று அவள் இறைவனிடம் ரகசியமாக வேண்டியது இன்று பலித்து விட்டதோ?
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
{{comments.comment}}