சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

Apr 25, 2025,02:12 PM IST

- ஸ்வர்ணலட்சுமி 


ஏப்ரல் 25 ஆம் தேதி 20 25 வெள்ளிக்கிழமை சித்திரை மாதம் 12ஆம் நாள் வரும் தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது.


சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்தி பகவானையும் மனதார நினைத்து இந்த சுக்கிர பிரதோஷ நாளில் வழிபாடுகள் செய்ய அவரவர் வேண்டுதல்கள், நிகழ்கால வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் .மற்றும் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும்.


மேலும் குழந்தை வரம் வேண்டுபவர் ,கடன் தொல்லைகளில் இருந்து விடுபட ,திருமண தடை தீர இந்த வழிபாடு செய்வது அதீத சிறப்பு வாய்ந்ததாகும். 


நேரம் :ஏப்ரல் 25 காலை    11 :44 மணி துவங்கி ஏப்ரல் 26  காலை  8: 27 மணி வரை திரியோதசி திதி உள்ளது. பக்தர்கள் மாலை  4 :30 முப்பது மணி முதல் 6:00 மணி வரை பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமான் பூஜை செய்வது மிகவும் நல்லது.




வீடுகளில் பூஜை செய்பவர்கள் புனித நீராடி, சிவபெருமான் உருவ படங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நெய்வேத்தியம் வைத்து, வில்வ இலைகள் ,துளசி இலைகள், நெய் தீபம் ஏற்றி வழிபட அவரவர் பிரச்சினைகள் படிப்படியாக குறையும் என்பது நம்பிக்கை.


மாலையில் சிவபெருமான் ஆலயங்களுக்கு அபிஷேகப் பொருட்கள், மலர்கள் ,வில்வ இலை வாங்கிச் செல்வது மிகவும் சிறப்பு .அபிஷேகம் செய்யும் பொழுது "ஓம் நமச்சிவாய "எனும் பஞ்சாட்சர மந்திரம் மனதில் கூற வேண்டும் .ஸ்ரீ ருத்ரம் படிக்க சிவபெருமான் மனம் குளிர்வார்.


பிரதோஷம் என்பது "பிர" என்பது நீக்குதல் ,"தோஷம்" என்பது தோஷங்களை நீக்குதல் என்பதாகும். சாஸ்திரத்தில் ஒருமுறை பிரதோஷ விரதம் கடைபிடிப்பதால் 15 நாட்கள் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும் .11 முறை பிரதோஷ விரதம் கடைபிடிப்பதால் ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் பார்த்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


சிவபெருமான் ,பார்வதி தேவி ,விநாயகர், நந்தி பகவானை வழிபட பல கோடி நன்மைகள் கிடைக்கும் ,பாவங்கள் நீங்கும் ,சிக்கல்கள் விலகும். சுக்கிர பிரதோஷ விரதம் இருப்பதனால் குழந்தைகள் படிப்பில் நன்றாக சிறந்து விளங்குவர் .கோடை விடுமுறையில் படிக்கும் குழந்தைகளை இவ்வாறு ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்ய அவர்களுக்கு வாழ்க்கையில் ஞானம், நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, ஆன்மீக வளர்ச்சி ,உடல் நலம், நற்பண்புகள் ஏற்படும்.


சிவபெருமான் அருள் அனைவருக்கும் சுக்கிர பிரதோஷ நாளில் கிடைக்கட்டும் .மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்