தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்

Nov 05, 2025,05:16 PM IST
சென்னை: 2026ல் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி. ஒன்று திமுக, இன்னொன்று தவெக. 2026 தேர்தலில் தவெக வாகை சூடும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
 
தவெக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விஜய் தலைமையில் இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தவெக தலைவர்  விஜய் பேசுகையில், குடும்ப உறவுகளை இழந்ததால், வேதனையில் இருந்தோம். அதனால் தான் அமைதியாய் இருந்தோம். கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பட்டது. 

நியாயமான விசாரணை நடைபெறுமா என்று உச்சநீதிமன்றத்திற்கே சந்தேகம் வந்தது. எந்த ஆவணத்தின் அடிப்படையில் எஸ்ஐஆர் அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேட்டது. உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் வாதாட முடியாமல் மவுனம் காத்தனர்.





தவெகவிற்கு வந்துள்ள இடையூறு வெறும் தற்காலிகம் தான். தடம் மாற மாட்டோம். 2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி. 2026 தேர்தல் தோல்விக்கு பின், மக்களள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை இப்போதே திமுக தயார் செய்து கொள்ள வேண்டும்.2026ல் தவெக வாகை சூடும் வரலாறு படைக்கும்.

அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைத்தது அரசு. அந்த ஆணையத்தை  அவமானப்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். தனி நபர் ஆணையத்தின் தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஏன் என மக்கள் கேள்வி கேட்டனர். இதெல்லாம் ஏன் நடக்கிறது, எதற்காக நடந்தது என மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்து விட்டாரா?.

பொய் மூட்டைகளால் நம்மைப் பற்றி அவதூறு பரப்புகிறார். குறுகிய மனதுடன் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசியல்  காழ்ப்புணர்வுடன் குற்றம் சாட்டினார் முதல்வர். அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை துவங்கிவிட்டார் முதல்வர்.1972க்கு பிறகு, கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற நிலையில் உள்ளது திமுக என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்