சென்னை: இதுவரை வாட்ஸ் அப் பச்சை நிறத்தில் மட்டுமே காட்சி அளித்து வந்த நிலையில், இனி பல்வேறு நிறங்களில் வாட்ஸ் அப் செயலியின் தீமை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
"காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை.. "அம்மா" கிடையாது.. "மம்மி"யும் கிடையாது.. மாறாக வாட்ஸ் அப்தான்!,. இன்று வாட்ஸ் அப்பில் தான் பெரும்பாலானவர்கள் கண் விழித்து முதலில் பார்க்கின்றனர். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பெரும்பாலான பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஐந்து நிறங்களில் செயலியின் தீமாக கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இனி பயனர்கள் தங்களுக்கு ஏற்றார் போல நிறங்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்டின் படி வாட்ஸ் அப் செயலி ஐந்து வெவ்வேறு நிறங்களில் தீம்களில் வரும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோட்டிபிகேஷன் நிறங்களை கூட பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்தாற் போல மாற்றிக் கொள்ள முடியும்.
இதுக்கு நாம என்ன செய்யணும் தெரியுமா?
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ios சாதனத்தில் வாட்ஸ் அப்பை திறக்கவும்.
வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சாட்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தீம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் பக்கத்தில் சிஸ்டம் டீபால்ட், லைட் மற்றும் டார்க் ஆகியவை இருக்கும். அதன் பின் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என 5 நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}