மகிழ்ச்சி.. அழகான தொற்று!

Dec 20, 2025,11:12 AM IST

- அ.வென்சி ராஜ்


மகிழ்ச்சி பற்றி எழுத பன்மடங்கு மகிழ்ச்சி தான்.... 

இதைப் போல  ஒரு வேகமான தொற்று....

வேறு எதுவும் இல்லை...

கொரோனா வை விட  பல மடங்கு... 

பார்ப்பவர் க்கு எல்லாம் தொற்றிக்கொள்ளும்... 




மனமெங்கும் மத்தாப்பு சிதறிடும்... 

முகமெல்லாம் பூக்கள் பூக்கும்....

கண்கள் இரண்டிலும் விண்மீன் மின்னும்...

முத்துப்பல்  சிரிப்பில் நிலவின் ஒளி தெரியும்...

நல் சிந்தனைகள் அருவி போல  கொட்டும்... 

புதிய சிந்தனைகள் ஊற்று போல் பொங்கிடும்... 

நடையும் உடையும் நதி போல அசைந்தாடும்... 

நம்பிக்கை அந்நேரத்தில் மலை போல் உயர்ந்திடும்.... 

குழந்தை போல மனம் எப்போதும் குதூகலிக்கும்... 

கவலை எல்லாம் பறந்து போகும். ..

துன்பமெல்லாம் தொலைந்து போகும். ..

நோவு என்பது நொடிப்பொழுதும் இல்லை ....

ஔடதம் இல்லாமல் வாழ அகமும் முகமும் மகிழ்வோம்... 

இனிமை தரும் மகிழ்ச்சியோடு எப்பொழுதும் பயணிப்போம்.

பார்ப்பவருக்கெல்லாம் உடனே ஒட்டிக் கொள்ளும். .. 


என்னிடம் இருக்கு உங்களுக்கும் தரவா...?.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்