கவிதைகள்.. கனவுகளால் இணைத்து.. காலமெல்லாம் வாழும் கலைவிழா!

Mar 21, 2026,03:53 PM IST

- தி.மீரா


கவிதை நாள் வந்தது கலைமகள் பாடலாய்

கனிவான சொற்களில் கருவிகள் மலர்கின்ற,

மனதின் ஓவியம் மெல்லிசை ஆகிட,

மௌனத்தின் மொழிகள் வரிகளில் பேசுகின்ற.

எழுத்தின் ஒளியில் எத்தனை உலகங்கள்,

எண்ணத்தின் இறக்கை எட்டாத வானங்கள்,


பாடலாய் பொங்கும் பரவச நெஞ்சங்கள்,

பார்வைக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் இங்கே.

கவிதை என்பது கண்ணீரின் சுவைதான்,

காதலின் மொழியும் காயத்தின் மருந்தும்,

சொல்லாத கதைகள் சொல்லும் கலைதான்,

சொல்லின் வழியே உயிர் பேசும் தருணம்.




கவிஞர்கள் மனதில் கனிந்திடும் நம்பிக்கை

காலத்தை கடக்கும் காற்றாக மாறுமே,

கவிதை நாள் நம்மை கனவுகளால் இணைத்து,

காலமெல்லாம் வாழும் கலைவிழா ஆகுமே.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்