மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

Dec 15, 2025,11:21 AM IST

- சரளா ராம்பாபு


நாம் 2024 இல் google  search செய்தோம். ஆனால் இப்பொழுது gpt chat முதலியவை செய்கிறோம். Review ,rating, பார்த்து பொருட்களை ஆன்லைனில் தேர்வு செய்தோம். இப்பொழுது influence பார்த்துப் பொருள்களை செலக்ட் செய்கிறோம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகங்கள் பொதுமக்களை தங்களின் இணையதள சேவைக்கு வசமாகும் வகையில் மாற்றிவிட்டன.


திரையரங்குகளில் படம் பார்த்தவர்கள் இன்று ஓ டி டி தளங்களில் படங்களை பார்க்கிறோம். ஓ டி டி தளங்களும் ஆரம்பத்தில் நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு இப்பொழுது தயாரிப்பாளர்களிடம் படங்களை வாங்குவதை பற்றி யோசிக்கின்றன. தயாரிப்பாளர்கள் திரையரங்குகளிலும்  படங்களைவெளியிட முடியாமல் மேலும் ஓ டி டி  போன்ற தளங்களில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.


பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது. இது மிகவும் சுலபமாக இருந்தாலும் மிகவும் சவால்கள் நிறைந்ததாகவும் சில கவனக்குறைவுகளால் பணம் முழுவதும் பறிபோகும் அபாயம் நிறைந்ததாகவும் உள்ளது. மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் டிஜிட்டல் முறை போலி பணப் பரிவர்த்தனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.




முன்பு பிரவுசிங் செய்து செய்த செய்திகளை கற்றறிந்த நாம் இப்பொழுது சாட் மூலமே விஷயங்களை புரிந்து கொண்டு கற்கும் அளவு முன்னேறியுள்ளோம்.  Twitter , Facebook Instagram போன்றவற்றுக்கு மக்கள் மிகவும் முன்னுரிமை தருகின்றனர். சன் தொலைக்காட்சி ஜெயா  தொலைக்காட்சி போன்றவற்றில் படம் செய்திகளை பார்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் தங்களின் மொபைல் ஃபோனையே மக்கள் நாடுகின்றனர். 


Zomato ,swiggy, போன்ற online மூலம் உணவை ஆர்டர் செய்து வாங்கிய பல இந்த காலகட்டத்தில் சமையல்காரர்களை வீட்டிற்கு ஆர்டர் செய்து வரவழைத்து சிறிய சமையலையும் ருசி பார்க்கும்  app..களை அனுபவித்து மகிழ்கிறார்கள். Blinkit போன்ற சேவைகள் வீட்டிற்கு பொருட்களைக் கொண்டு வந்து ஆர்டர் செய்வதன் மூலம் தருகின்றனர். இது பெரிய பெரிய மால்களிலும் வர்த்தக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பலர், பெட்ரோல், டீசல் வாகனத்திலிருந்து எலக்ட்ரானிக் வாகனத்திற்கு மாறிவிட்டனர். எலக்ட்ரானிக் வாகனங்கள் காற்று மாசுபடுதலை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. இருந்தாலும், இது சமயங்களில் வாகனங்கள் வெடிக்கும் அபாயம் கொண்டதாகவும் காணப்படுகிறது. 


கேமராக்கள் மூலம் திருமணங்களில் புகைப்படம் எடுப்பது என்பதை விட ட்ரோன் மூலம் திருமணக் காட்சிகளை படம் பிடிப்பது ஆடம்பரமாகிவிட்டது. திருமணங்களில் விருந்தோம்பல் பலவகையான சேட் ஐட்டம், உணவு பரிமாறுவதற்கு முன்னரே பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் தருவது போல்  வைக்கப்படுகிறது.  


மணப்பெண்ணும் மணமகனும் ஆடல் பாடலுடன் மேடையேறும் கலாச்சாரமும் வளர்ந்து வருகிறது. மணமகனும் மணமகளும் திருமணத்திற்கு பின்னர் பார்ப்பது பேசிக் கொள்வது என்பது பழைய பஞ்சாங்கம் ஆகிவிட்டது. Pre- shoot  என்பது சாதாரண திருமணத்திலும் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்கின்றனர் பலர் என்பது மறுக்க முடியாத உண்மை. 


விடுமுறையில் குழந்தைகளுடன் உறவினர் வீடுகளுக்கு சென்ற கலாச்சாரம் மாறிவிட்டது. ரிசார்ட் புக் செய்தும் ஆடம்பரமாக சுற்றுலா செல்லவும் பலர் தனி குடும்பமானாலும் செலவழிக்க தயங்குவதில்லை.


இன்றைய உலகத்தை கணினியும், தொலைபேசியும் முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டுள்ளது. பள்ளி செல்லும் பெரும்பாலான சிறுவர்களின் விளையாட்டுக்கள் பலவும் மொபைல் போனில் தான் என்பது வேதனையான விஷயம்.  கல்வித்துறையில் நவீன தொழில்நுட்பம் சிறு குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பில்திணித்துள்ளது. குழந்தைகளுக்கான ஓய்வு நேரம் வெகுவாக குறைந்து விட்டது. சிறு குழந்தைகள் பலரும் AI  உருவாக்கும் கதைகளை பார்த்து உண்மை தன்மையிலிருந்து மாறுபட வாய்ப்புகள் அதிகம்.


மருத்துவத்துறையில்   AI நவீன தொழில்நுட்பம் பல மாற்றங்களையும் புரட்சிகளையும் செய்துள்ளது. வீட்டிற்கே mobile medical aid பல வகைகளில் வருகின்றது. இருந்தாலும் வியாதிகளும் அதற்கான  மருந்துகளின் தாக்கமும் அதிகரித்தே வருகின்றன. 


பலவற்றை புதியதாக இளைய சமுதாயம் google மூலமும் youtube முதலிய ஆன்லைன்களிலும் கற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் அவை அனைத்தையும்  கூட்டுக் குடும்பங்களில் அனுபவ பாடமாக கற்றவர்கள் சாதித்ததை விட சற்று குறைவாகவே மதிப்பிட வேண்டும்.


இன்றைய சூழலில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் மாறி அவை அனைத்தும் massage parlour  களாக மாறிவிட்டன.

கை கால்கள் பிடித்து விட்டு தூங்கிய காலம் போய், acu pressure , food reflectology ஆக உருமாற்றம் கண்டது விந்தை.


உடை ,உணவு, வொர்க் ப்ரம் ஹோம் என்பதில் கலாச்சாரம் பல புரட்சிகளை கண்டுள்ளது. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களால் மக்கள் பெரும் சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. மாற்றத்திற்கு ஏற்றார் போல் update செய்து கொள்ள சமுதாயம் பெரும் போராட்டத்தை சந்திக்கிறது. நமக்குத் தேவையான நகைகள் முதலியவற்றைக் கூட நமது இடத்திற்கே app ஆடர்கள் மூலம் select  செய்து வரவழைத்துக் கொள்கிறோம். இருந்தாலும் பலருக்கு நேரம் பற்றாக்குறை என்பது அதிகமாக உள்ளது, இந்த நவீன உலகின் சாபமா அல்லது வரமா என்பது மிகப்பெரிய கேள்வி.


"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதை மக்கள் மனதில் கொண்டு வெகுவாக மாறி வருகின்றனர் என்பதே நிதர்சனம்.


(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து  நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

news

உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை

அதிகம் பார்க்கும் செய்திகள்