வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்.. பெய்கின்றது மழை!

Mar 21, 2026,03:32 PM IST

- இரா.மும்தாஜ் பேகம்


தமக்கென முயலா நோன்தாள், 

பிறர்க்கென  முயலுனர்.


வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்

பெய்கின்றது மழை.


மணத்திற்கா, பிணத்திற்கா அறியாத போதும் 

மலர்கின்றன மலர்கள்.


ஏழைக்கா, எஜமானனுக்கா, 

அறியாத போதும் வீசுகின்றது காற்று.


இன்பமா, துன்பமா? 

அறியாத போதும் துடிக்கின்றது இதயம்...


குருதியை பாலாக்கிக் கொடுத்திடும் பசு


இருளினை நீக்கிட இலகிடும் மெழுகு.



பசியினை போக்கிட பழம் தரும் சோலை மா.


உலகம் உய்ய உணவளிக்கும் நிலமகள்.

 

பலனை எதிர்பாராமல் உதவி செய்பவர்

மழையைப் போன்ற மாமனிதர்.


இல்லை என்றிருப்பவர் வாழ்வில்

ஒளிவிடும் சுடரை போன்ற புனிதர்.


உழைத்துச் சேர்த்த பொருட்களின் மிகுதி

வறியவர்க் களிப்பர்.


கொடுத்து மகிழ்வதில் கிடைக்கும் இன்பம் வேறெ திலும் கிடைக்காதே...


(இரா. மும்தாஜ் பேகம், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்