- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
பொதுவாகவே அணில்கள் பழங்களை பாதி பாதியாகக் கொறித்து விட்டு......
மீதி உள்ளவற்றை தனக்குப் பின்னால் தேவைப்படும் என்று மண்ணிற்குள் புதைத்து வைக்கும் ..........
பின்னாளில் அதற்கு தேவைப்படும் பொழுது எந்த இடத்தில் புதைத்து வைத்தோம் ............
என்பதே தெரியாமல் சுற்றி சுற்றி அலைந்து அதையே நினைத்து ...
உணவில்லாமல் இறந்து போவதும் உண்டு .........
இது போலவே இன்றைய மனிதர்களின் மனநிலை ...
படித்தவர்களோ மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே ........
படைப்பாளர்களோ புத்தகங்களோடும் எழுதுகோலோடும் தனியாகவே ......
பெரும் பணக்காரர்களோ பணத்தின் மீதே கண்ணாக .....

சிந்திப்போம் செயல்படுவோம் ...
பாடுபடுவோம் பலன்பெறுவோம் ...
கையில் உள்ளதை மறந்து விட்டு காணாததை தேடி மனம் கலங்குவது .....
இயற்கை நிலை மறந்து செயற்கைக்கு மனம் ஏங்குவது ....
நிலையான மனம் கொண்டு எதிலும் ஒரு அளவு அதுவே அழகு....
இமைக்கும் கண்களை மென்மையாக மூடிக்கொள் .....
இயற்கை சூழலை இனிமையாக்கு மனதுக்குள் ....
மலையில் இருந்து விழும் அருவியின் ரீங்காரம் காதுக்குள் ...
சிலு சிலுக்கும் தென்றல் காற்று ஜில்லென்று உடலுக்குள்...
மென்மையாக விரியும் மொட்டுக்களின் வாசம் தாக்கும் நாசிக்குள் .....
மெலிதாக ஒலிக்கும் இசையின் கீதம் தாலாட்டும் நெஞ்சுக்குள் ....
கனவா இது நினைவா
கனவும் நினைவாகும் ......
நிழலா இது நிஜமா நிழலும் நிஜமாகும்.....
மகிழ்ந்ததா மனம் கொஞ்ச நேரம் ...
மகிழ்வோம் தினம் நிரந்தரம் ....
துன்பத்தை தூர வைத்து அன்பை அகத்தில் வைத்து ....
இன்பத்தை இதயத்தில் வைத்து நினைவினை நெஞ்சத்தில் வைத்து ....
நம்பிக்கையை மட்டும் நமக்குள் வைத்தால் ...
இந்நாள் என்ன எந்நாளும் வெற்றியே....
(கவிதாயினி DR.மணிமேகலை. S., ஈரோடு)
பூவ பூவ பூவே.. மனதை அமைதியாக்கும்.. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தும் பூக்கள்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
கூரைவீடு !
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
{{comments.comment}}