- கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன்
புலரும்பொழுதின் சிரிக்கும்
மலரின் புன்னகை நீ....
பச்சைக் கம்பளம் விரித்த
பசும்புல்லின் தலைக்கவசம் நீ....
இலைகளின் மீது புள்ளி வைத்து விட்டு
கோலம் போட சொன்னது நீ....
வாகனங்களை குளிப்பாட்டும்
அதிகாலை அருவி நீ....
கொடியில் காய்ந்த துணிகளை
குளிரூட்டும் குளிர்சாதனப் பெட்டி நீ....

தினையளவுதான் என்று பார்த்தால்
பனையளவும் காட்டும் உருப்பெருக்கியும் நீ...
சிறிது,பெரிது என்பதை பார்வையால் தீர்மானித்து விடாதே
அதனால் சாதிக்க முடிந்த உயரத்தை வைத்துப்பார்
என்று சொல்லாமல் சொல்லும் அளவு கோலும் நீ....
பார்க்கும் கண்களுக்கு அழகு நீ...
இன்பம் நீ....
நீ இன்பமா இல்லை பாரமா என்பது
உன்னைத் தாங்கும் புல்லுக்குத்தான் தெரியும்.... !!!
ஒருவரின் வாழ்க்கை இன்பமா துன்பமா என்பது
அவர்களுக்குத் தான் தெரியும்..!!!
பனி சூரியனுக்கு பணியும் ...
மனிதா நீ வாழ்க்கையில் பணிவு கொள்...
பனித்துளி போல உயரத்தில் இருப்பாய்....!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}