- டி. ஜெனிட்டா ரீனா
அம்மா என்பவர்
அன்பின் பிறப்பிடம்
பாசத்தின் உறைவிடம்
நேசத்தின் தோழி
பரிவு காட்டும் தேவதை
பண்புகளை கற்றுத்தரும் ஆசான்
கோபத்தால் குடும்பத்தை காப்பவர்
சுவாசமாய் அனைவரிலும் வாழ்பவர்
மலர் போன்ற மென்மையானவர்
பணிவு என்ற கவசத்தை உடையவர்

மணம் வீசும் பூந்தோட்டம்
அலை அலையாய்
அக்கறையாய் பின்தொடர்பவர்
மானம் காத்த குலதெய்வம்
வாரிசு பெற்றுத் தரும் மருமகள்
துறவி போன்று
தஎனக்கென்று பற்றில்லாதவர்
உயிர் அவளின் குடும்பம்
மூச்சு அவளின் பிள்ளைகள்
குடும்பத்தின் ஆணிவேர்
பந்தம் வளர்க்கும் குலவிளக்கு
பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும்
வழி காட்டும் நடமாடும் வங்கி!
தன் கடமையை அன்பால் செய்யும்
தீர்க்க முடியாத அன்புக்கடன்
அன்பெனும் வட்டிக்கடனை என்றும் அடைக்க
முடியாத கடனாளியாக நான்
உழைப்பின் சிகரம்
உயர்வின் மலை
உண்மையின் தவம்
நேர்மையின் புகலிடம்
துணிச்சல் மிக்க வீரமங்கை
தாலாட்டுப் பாடும் இசைக்குயில்
நாங்கள் இன்பம் பொங்க வாழ
துன்பங்கள் பலவற்றைச் சகிப்பவள்
குடும்பத்தின் குலப்பெருமை காப்பவள்
உடல் மெலிந்தாலும் உறவுகளைக் காப்பவள்
உண்டி கொடுத்து எங்கள் பசி போக்கி
உயிரைத் தந்து உயர்த்தியவள்
பார் போற்றும் மாமனிதர்—அவர்
என் அன்பு அம்மா
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
ரீல்ஸ் நமக்கு தேவையா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
பிரியாவிடை!
திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
{{comments.comment}}